மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

 

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

டந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக பாஜக முன்வைத்த முழக்கம்தான் ’வேல் வேல் வெற்றி வேல்’. கந்தசஷ்டி விவகாரத்தில் ஆவேசமான தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், ‘வேல் யாத்திரை’யை அறிவித்தார். அரசு அந்த யாத்திரைக்கும் தடை போட்டாலும் கூட, திருத்தணியின் தடபுடலாக யாத்திரையை தொடங்கினார் முருகன். அதன் பின்னர் யாத்திரையை நினைத்தபடி தொடரமுடியாவிட்டாலும் கூட, ஆங்காங்கே யாத்திரை கூட்டம் நடத்தி ஒருவழியாக திருச்செந்தூரில் யாத்திரையை நிறைவு செய்தார்.

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

ஒருவகையில் இந்த யாத்திரை தோல்விதான் என்று பலர் விமர்சித்தாலும், பாஜகவை பொறுத்தவரைக்கும் வேல் யாத்திரை வெற்றி யாத்திரை என்றே பேசி வந்தனர்.

முருகனை தொடர்ந்து தமிழக பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை காவடி தூக்கி மேலும் பரபரப்பு கூட்டினார்.

தேர்தல் பிரச்சாரத்திலும் முருகன், அண்ணாமலை மட்டுமல்லாது மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் கூட, ‘வேல் வேல் வெற்றி வேல்’ என்று முழக்கமிட்டார்கள்.

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 4 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. அதிலும், வேல் யாத்திரை நடத்திய முருகனும், காவடி தூக்கிய அண்ணாமலையும் தோல்வியுற்றனர்.

இதுகுறித்து பாஜகவினர் கூடி பேசியிருக்கின்றனர். சமூக வலைத்தளமான டுவிட்டர் ஸ்பேசசில் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பாஜகவினர் தோல்வி குறித்து பேசியபோது, ‘’வேல் வேல் என்று போனதாலேயே ஜெயிச்சிட முடியும்னு நினைத்தால் எப்படி முடியும்? அவர் வேல் வேல் வெற்றி வேல் என்பார். இன்னொருத்தன் ஓம் நமசிவாயா என்பான். இன்னொருத்தன் ஓம் நமோ நாராயணா என்பான். பார்த்தசாரதி கோயிலுக்கு போறவங்க கபாலிகோயிலுக்கு வரமாட்டாங்க.

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

அப்படி இருக்கும்போது முண்டகக்கன்னி அம்மன், வீரப்பசாமி என்று எத்தனையோ சாமி இருக்குது. அதனால என்ன செய்திருக்க வேண்டும். வேல் வேல் வெற்றிவேல் யாத்திரிக்கு பதிலாக ‘இறைநம்பிக்கை யாத்திரை’ என்று நடத்தி கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை ஒன்று சேர்ந்திருக்கவேண்டும்.

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

மோடியை கூப்பிட்டு வந்து, வேல் வேல் வெற்றி வேல் என்று சொல்ல வச்சு, அவரை ராசிபுரத்துக்கு கூப்பிட்டு வந்து பேசவச்சு, மோடி வந்து பேசினாலும் தோற்கடிப்பேன்னு ஆயிடுச்சே’’என்கிறார் எஸ்.வி.சேகர்.

இந்துக்களாக உடைந்து விடுவோமா என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத்தான், இந்துக்களாக ஒன்றுசேர முடியாது என்றுசொல்லிவிட்டு மேற்கண்ட விளக்கத்தை அளித்திருந்தார் எஸ்.வி.சேகர்.

மோடியை கூப்பிட்டு வந்து…சொல்ல வச்சு… எஸ்.வி.சேகர் விளாசல்

பாஜக பிரமுகர் என்றாலும் கூட, பாஜகவின் தவறுகளை தைரியமாக சுட்டுக்காட்டிய எஸ்.வி.சேகருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.