கூவத்தூர் பாணியை தவிர்த்த ஸ்டாலின்: அதற்கு பதிலாக அவர் அமைத்த புதிய பாணி

 

கூவத்தூர் பாணியை தவிர்த்த ஸ்டாலின்: அதற்கு பதிலாக அவர் அமைத்த புதிய பாணி

திமுக தலைவர் ஸ்டாலின் வீட்டில் கடந்த ஒரு வாரமாக வேட்பாளர்களும், ஒன்றிய, மாவட்ட செயலாளர்களும் வருவதும் போவதுமாக இருக்கின்றனர். எதற்காக இத்தனை பேரும் இத்தனை நிர்வாகிகளும் வந்து வந்து செல்கிறார்கள் என்று விசாரித்தால் ஒரு ஆச்சரிய தகவல் கிடைக்கிறது.

கூவத்தூர் பாணியை தவிர்த்த ஸ்டாலின்: அதற்கு பதிலாக அவர் அமைத்த புதிய பாணி

தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைந்தால், அதிலும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் திமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் 30,40 பேரை தங்கள் பக்கம் இழுத்து விட பாஜக ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறதாம் திமுகவுக்கு. இதனால் அதிர்ந்து போன திமுக சீனியர்கள் சிலர், அதிமுகவின் கூவத்தூர் பாணியை நாமும் பின்பற்றி விடவேண்டியதுதான் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். எம்.எல்.ஏக்கள் யாரும் தப்பி செல்ல முடியாத படி இருக்கும் இடம் என்று கூவத்தூர் பங்களா பற்றி சசிகலாவுக்கு நான் தான் சொன்னேன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நடிகர் கருணாஸ்தான், திமுக சீனியர்களூக்கும் அந்த ஐடியாவை சொன்னாராம்.

அதற்கு ஸ்டாலின், திமுகவின் கூவத்தூர் பாணியை இப்போதும் மக்கள் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த விமர்சனத்திற்கு நானும் ஆளாக வேண்டுமா என கேட்ட ஸ்டாலின், அதிமுக கூவத்தூர் பாணியும் ஒரு அரசியல் தந்திரம் தான். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் எப்படி எம்எல்ஏக்களை தக்கவைத்துக்கொள்ள அடைத்து வைத்தார்களோ, அதே மாதிரிதான் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் எம்எல்ஏக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அப்படி ஒரு நிலையை எடுத்தார்கள் அதிமுகவினர்.

கூவத்தூர் பாணியை தவிர்த்த ஸ்டாலின்: அதற்கு பதிலாக அவர் அமைத்த புதிய பாணி

அதற்காக நாமும் அப்படி ஒரு நிலையை எடுத்தால் எதிர்காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்படுவோம். அதனால் அந்த பாணி நமக்குத் தேவையில்லை என்று சொன்ன ஸ்டாலின், புதிய பாணியில் அதிரடி கொடுத்திருக்கிறாராம்.

அதன்படிதான் வேட்பாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, எதிர் தரப்பினர் என்னவெல்லாமோ சொல்லி உங்களை வளைக்கப் பார்ப்பார்கள். அவர்களுக்கு இணங்கி போய்விடாதீர்கள். நல்ல எதிர்காலம் இருக்கிறது நமக்கு. அதை வீணடித்து விடாதீர்கள் என்று அறிவுறுத்தி வருகிறாராம். அதுமட்டுமல்லாமல் வேட்பாளர்கள் தொகுதியை தாண்டி எங்கும் செல்லாதபடி சில சீனியர்கள் மூலமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

தொகுதிக்கு உள்ளேயே இருந்தாலும், கிட்டத்தட்ட வீட்டுச் சிறை என்பது மாதிரி தொகுதி சிறை என்ற நிலையில் திமுக வேட்பாளர்கள் இருக்கிறார்கள். திமுக வேட்பாளர்களிடம் புதிய நபர்கள் யாரும் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பதையெல்லாம் கவனிக்க பெரிய டீமே அமைத்திருக்கிறாராம் ஸ்டாலின்.

கண்ணில் படும் திமுகவினரை எல்லாம் இவர்கள் ஸ்டாலின் நம்மை கண்காணிக்க போட்டு இருப்பாரோ என்று நினைத்து கதிகலங்கிப்போகிறார்களாம் திமுக வேட்பாளர்கள்.