அமைச்சரவை பட்டியலை தயார் செய்ய….இளவரசியை நாடும் ஸ்டாலின்

 

அமைச்சரவை பட்டியலை தயார் செய்ய….இளவரசியை நாடும் ஸ்டாலின்

ஸ்டாலினை விடவும் அவரது குடும்பத்தினர்தான் திமுக தான் ஆட்சிக்கு வரப் போகிறது என்று அழுத்தமாக சொல்லி வருகிறார்களாம். புதிய ஆட்சி, பதவி, பொறுப்பு எல்லாம் வந்து விட்டால் ஓய்வுக்கு நேரமிருக்காது என்பதால், பிரச்சாரம் என்று கடந்த சில மாதங்களாக ஓடி விட்டதால் இடையில் கிடைக்கின்ற இந்த இடைவெளியில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என ஸ்டாலினிடம் குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைச்சரவை பட்டியலை தயார் செய்ய….இளவரசியை நாடும் ஸ்டாலின்

அவரும் அதற்கு சம்மதம் சொன்னதால், எங்காவது வெளி நாடு சென்று விட்டு வரலாம் என்றுதான் முதலில் முடிவு எடுத்துள்ளார்கள். இது கொரோனா காலம் என்பதால் அதிக கட்டுப்பாடுகள் இல்லாமல் அனுமதிக்கப்படும் நாடு மாலத்தீவு தான். அங்கேயும் செல்வதற்கு நெகட்டிவ் ரிசல்ட் வேண்டும் என்பது மட்டுமில்லாமல் பரிசோதனை செய்த பரிசோதனை மையத்தின் முழு விபரத்தையும் அளிக்க வேண்டும். மாலத்தீவு சென்ற பின்னரும் கூட ஒரு பிசிஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். திரும்பவும் வந்து இந்தியாவில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தீவில் கடலில் மிதக்கும் நகரத்தில் ஓய்வெடுத்து அப்படியே ரிலாக்ஸாக அமைச்சரவைப் பட்டியலையும் தயார் செய்து விடலாம் என்றுதான் ஸ்டாலினும் யோசித்திருக்கிறார். ஆனால் பரிசோதனை, கொரோனா நடைமுறைகள் இவற்றை எல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்ட ஸ்டாலின், அது சரிப்பட்டு வராது என்று பின் வாங்கியிருக்கிறார்.

இந்த ஆலோசனையில் நாட்கள் நகர்ந்து விட்டன. தேர்தல் முடிவுக்குப் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அதற்குள் தமிழ் நாட்டுக்குள்ளேயே எங்காவது சென்று வரலாம் என்று முடிவு செய்து, எங்கே செல்லலாம் என்று யோசித்தபோது, மலைகளின் இளவரசிதான் சரியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.

அமைச்சரவை பட்டியலை தயார் செய்ய….இளவரசியை நாடும் ஸ்டாலின்

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஓய்வெடுத்துக் கொண்டேஅமைச்சரவைப் பட்டியலையும் தயார் செய்துவிடலாம். தேவைப்படும் பட்சத்தில் சீனியர்களை அழைத்துப் பேசவும், மலைகளின் இளவரசிதான் வசதியாக இருக்கும் என்று கணக்கு போட்டு, கொடைக்கானல்தான் என்பதை திட்டவட்டமாக சொல்லிவிட்டாரம்.

இதனால் ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் அவரது மனைவி கிருத்திகா, ஸ்டாலின் மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் மற்றும் உதயநிதி, செந்தாமரை பிள்ளைகள் அனைவரும் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார்கள். கொடைக்கானலில் மூன்று நாள் வரைக்கும் இருப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அனேகமாக இன்றைக்கு 16ம் தேதி கொடைக்கானலுக்கு அவர்கள் புறப்பட இருக்கிறார்கள் என்று தகவல்.