கேலி, கிண்டல்களுக்கு செவிசாய்க்க… கருணாஸ் கண்ணீர் கடிதம்

 

கேலி, கிண்டல்களுக்கு செவிசாய்க்க… கருணாஸ் கண்ணீர் கடிதம்

அதிமுகவை நிராகரிப்போம் என்று முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களுக்கு உருக்கமான கண்ணீர் விடும்படியான கடிதம் எழுதியிருக்கிறார்.

கேலி, கிண்டல்களுக்கு செவிசாய்க்க… கருணாஸ் கண்ணீர் கடிதம்

நடைபெறவிருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் முக்குலத்தோர் சமுதாயத்திற்கு துரோகம் இழைத்த அண்ணா திமுகவை நிராகரித்து தோற்கடிக்க முக்குலத்தோர் புலிப்படை சபதமேற்று உள்ளது. இந்த தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை சார்பாக யாரும் போட்டியிடவில்லை . மாறாக 234 தொகுதிகளிலும் வசிக்கும் முக்குலத்தோர்களிடம் நமது கோரிக்கை அதிமுக எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்து சமூக வலைதளங்கள் , ஊடகங்கள் வழியாக மக்களிடம் கொண்டு செல்ல தலைமை வலியுறுத்துகிறது.

அண்ணா திமுகவை தோற்கடிக்க அந்தந்த தொகுதிகளில் களநிலவரத்திற்கு ஏற்றவாறு நிர்வாகிகள் பணியாற்ற தலைமை அறிவுறுத்துகிறது. தேர்தலில் போட்டியிடாத சூழலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம் எனவும் இந்த அரசியல் வெற்றிடம் தரும் கேலி கிண்டல்களுக்கு செவிசாய்க்க வேண்டாம் எனவும் , ஐந்தாண்டுகள் வீண் என சொல்லும் அரசியல் மூடர்களுக்கு செவி சாய்க்க வேண்டாம் என தலைமை கேட்டுக் கொள்கிறது.

கேலி, கிண்டல்களுக்கு செவிசாய்க்க… கருணாஸ் கண்ணீர் கடிதம்

இந்தத் தேர்தலில் திராவிட இயக்கங்களால் அரசியல் அனாதையாக்கப்பட்ட முக்குலத்தோர் சமுதாயம் அதன் இளைஞர்கள் அரசியல் அதிகாரத்தையும் அரசியலின் தன்மையையும் புரிந்து எதிர்காலத்தில் எவரும் முக்குலத்தோர் அல்லாத அரசியல் நிலையை நினைத்து பார்க்க முடியாதபடி அரசியல் பணியாற்ற முன்வரவேண்டும். இடஒதுக்கீட்டால் ஏற்படும் இழப்பு, எதிர்கால மாணவர்களின் வேலைவாய்ப்பு இழப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பரப்ப இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிது.

ஒரு அமைப்பின் அல்லது மனிதனின் வாழ்வில் சுப நிகழ்வுகளில் உடனிருப்பதை விட துக்க நிகழ்வுகளில் , கஷ்டகாலத்தில் தோளோடு தோன் கொடுப்பது மட்டுமே வரலாற்றில் பதியப்படும் முக்குலத்தோர் புலிப்படையின் மக்கட்டான சூழ்நிலையில் சோதனைகளை வென்று எதிர்காலத்தில் சாதனைகளை படைப்போம் என்பதை நிர்வாகிகள் தொண்டர்களான உங்கள் மீது தலைமைக்கு முழு நம்பிக்கை இருக்கிறது . 2021ல் இழந்த மரியாதையை அதிமுகவை நிராகரித்து தோற்கடிப்பதே நமது
இலக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.