அதிமுக கோட்டையை தகர்ப்பாரா சசிகலா ? – அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

 

அதிமுக கோட்டையை தகர்ப்பாரா சசிகலா ? – அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

எது நடக்கக்கூடாது என நினைத்தார்களோ.. அது நிகழ உள்ளதை கண்கூடாக பார்க்கின்றனர் அதிமுக நிர்வாகிகள். சசிகலா வருகை அதிமுகவில் நிர்வாக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால், அதிர்ந்து கிடக்கிறது எடப்பாடி தரப்பு என்கிறார்கள். இது தொடர்பாக அந்த கட்சி மட்டத்தில் விசாரித்தபோது, கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை என அடித்துச் சொன்னாலும், கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதை மறைக்க முடியாது என்கிறார்கள்.

அதிமுக கோட்டையை தகர்ப்பாரா சசிகலா ? – அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்தியது கட்சியினரிடம் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநாளில் சசிகலா வருகை தந்திருந்தால் அவருக்கான கவனம் குறைந்திருக்கும். ஆனால் சிறையில் இருந்த அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தமிழகம் வருவது தள்ளிப்போனது. இந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து தனியார் விடுதியில் ஓய்வெடுத்து வருகிறார். அநேகமான அடுத்த வாரத்தில் தமிழகம் வர உள்ளதால், அவரது வருகை அதிக கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டியிருந்தது முதலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கோட்டையை தகர்ப்பாரா சசிகலா ? – அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

ஆனால், அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சகிகலா தலைமை இருந்தால்தால், கட்சிக்கு வெற்றிவாய்ப்பு என கருதுகின்றனர். அதனால்தான் வரவேற்பு போஸ்டர்கள் ஒட்டத்தொடங்கி உள்ளனர். முதலில் நெல்லையில் மாவட்ட நிர்வாகி சுப்ரமணிய ராஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் பின்னர் தேனி மாவட்ட நிர்வாகி இருவர் நீக்கப்பட்டார். அதற்கடுத்து தூத்துக்குடியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதன்பின்னர் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெய பிரதீப் , சசிகலா பூரண நலம் பெற வேண்டும் என கூறியதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி அடுத்தடுத்து முக்கிய நிர்வாகிகள் சசிகலா பக்கம் தாவுவதால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாமல் தலைமைக் கழகம் திண்றுகிறது. நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்குவதன் மூலம், மேலும் கட்சி வலுவில்லாமல் இருக்கிறது என்கிற தோற்றம் ஏற்பட்டுவிடும் என்பதால் அமைதி காக்கிறது.

அதிமுக கோட்டையை தகர்ப்பாரா சசிகலா ? – அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

இப்போதுகூட சசிகலா வருகை குறித்து வேறு எந்த அமைச்சர்களும் வாய் திறப்பதில்லை என்பது கவனிக்கத்தக்கது. முதல்வர் கூட இப்போது சசிகலா வருகை குறித்து திரும்ப கருத்து தெரிவிக்காமல்தான் இருந்து வருகிறார். ஒருவேளை மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மட்டத்தில் மாற்றம் ஏற்பட்டால் தவிர, சசிகலா வருகை கட்சியை பாதிக்காது. சசிகலா வந்தால் மீண்டும் பழைய பணிவு, குனிவு, கேலி நிலைக்கு ஆளாக நேரிடம் என்பதால், மூத்த நிர்வாகிகள் எடப்பாடி தலைமையை விரும்புகின்றனர் என்றனர். சசிகலா கொடியோடு மட்டும்விட்டு விடுவரா? அல்லது அதிமுக கோட்டையை தகர்ப்பாரா என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்.