அமித்ஷா வருகை… அதிமுக அவசர ஆலோசனை!

 

அமித்ஷா வருகை… அதிமுக அவசர ஆலோசனை!

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் தலைமை அலுவலகத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக்கூட்டத்தில் அமைச்சர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அமித்ஷா வருகை… அதிமுக அவசர ஆலோசனை!

இது தேர்தல் தொடர்பான ஆலோசனை என்று அதிமுகவினர் சொல்லி வந்தாலும், அமித்ஷா நாளை தமிழகம் இருப்பதை முன்னிட்டுத்தான் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது என்றும் தகவல் கசிகிறது.

அமித்ஷா வருகை குறித்தே கூட்டத்தில் அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

அமித்ஷா வருகை… அதிமுக அவசர ஆலோசனை!

அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிறார் என்று பாஜகவினர் சொல்லி வந்த நிலையில், பாஜகவை வளர்க்கத்தான் அமித்ஷா தமிழகம் வருகிறார் என்று போட்டு உடைத்தார் அமைச்சர் ஜெயக்குமார். அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்பதாக இருந்தால் நிகழ்ச்சி நிரல் வந்திருக்குமே என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதே ஜெயக்குமார் இன்று, தமிழகம் வரும் அமித்ஷாவிடம், 7 பேரின் விடுதலை குறித்து வலியுறுத்துவோம் என்று சொல்லி இருக்கிறார்.

அமித்ஷா வருகை… அதிமுக அவசர ஆலோசனை!

அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், நாளை அமித்ஷா வரும் சூழலில் அதிமுகவின் ஆலோசனைக்கூட்டம் முக்கி்யத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார்கல் அரசியல் நோக்கர்கள்.