பாஜக அமைச்சரிடம் குமுறிய நெல்லை கண்ணன்… கதறடிக்கும் அந்த நான்கு பேர்..!

 

பாஜக அமைச்சரிடம் குமுறிய நெல்லை கண்ணன்… கதறடிக்கும் அந்த நான்கு பேர்..!

இதுவரை அவர்கள் ஆபாசமாக மனித நாகரீகமே இல்லாமல் எழுதியவை அனைத்தையும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.

சமூக வலைத்தளத்தில் தன்னை சிலர் மிகுந்த ஆபாசமாக பேசுவதாகவும், இதுகுறித்து துறை அமைச்சர் ஜெய்சங்கர் இடம் புகார் அளித்துள்ளதாகவும் நெல்லைக்கண்ணன் கதறியுள்ளார். கடந்த சில நாட்களாக நெல்லைக்கண்ணனை, பாஜகவினர் சமூக வலைதளத்திலும், தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுவரை இல்லாத அளவு புதுப்புது வார்த்தைகளை கண்டுபிடித்து  திட்டி வருவதாகவும் இதனால் வேறு வழியின்றி தனது செல்போன் எண்ணை நெல்லை கண்ணன் ஆஃப் செய்து வைத்திருப்பதாகவும் கூறப்பட்டது.

 Nellai kannan

அது தற்போது உண்மையாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நெல்லை கண்ணன் ’’அன்புள்ளம் கொண்டவர்களே… நான்கே நான்கு பேரை வைத்துக்கொண்டு நிறைய பேர் நம்மை எதிர்ப்பது போல் நாலு பேர் எழுதுகின்றனர். நம்முடைய ஐடியில் அவர்களை கண்டுபிடித்து விட்டனர். இதுவரை அவர்கள் ஆபாசமாக மனித நாகரீகமே இல்லாமல் எழுதியவை அனைத்தையும் வெளியுறவுத் துறை அமைச்சருக்கும் அனுப்பியுள்ளேன்.nellai

அவரும் தமிழர் தானே… தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று அவருக்கு தெரியாமலா இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். நெல்லைக்கண்ணனை 4 பேர்கள் மட்டும் தான் தரக்குறைவாக பேசியதாகவும் மீதமுள்ளவர்கள் அவரை திட்டமில்லை என்று சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தான் ஒரு சுகர் பேஷண்ட் எனவும், இரவில் செல்போன் செய்து காதில் கேட்க முடியாத வார்த்தைகளில் திட்டுவதாக தனது ஆதரவாளர்களிடம்  தெரிவித்துள்ளார்.

amiyt shah

தினமலர் தன்னைப்பற்றி தவறாக விமர்சனம் செய்ததால் இதுவரை தினமலர் படிக்காத நான் இனி தினமலர் உரிமையாளர் குறித்து சில தகவல்களை வெளியிடப் போவதாக தெரிவித்துள்ளார். மொத்தத்தில் நெல்லைக்கண்ணன் நிலைமை கரண்டு கம்பத்தில் சிக்கிய கதையாக மாறி விட்டது.