விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும்: அதிமுகவில் அடுத்த விஞ்ஞானி அமைச்சர் ரெடி

 

விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும்: அதிமுகவில் அடுத்த விஞ்ஞானி அமைச்சர் ரெடி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானம் மூலம் மின்கம்பங்களை நட வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கஜா புயல் நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை அசுர கரங்களால் அலசிப்போட்டிருக்கிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உணவு, உடை, மின்சாரம், வீடு என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பழுதடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், மின்சாரம் விநியோகிப்பதற்காக மின் கம்பங்களை நடும் பணி நேற்று நடைபெற்றது. மீட்பு பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் பார்வையிட்டனர். அப்போது மாலை 6 மணிக்குள் வேதாரண்யம் டவுனில் மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். 

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், நவீன டெக்னாலஜி மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான திட்டத்தை உடனே துவக்க வேண்டும் என்றார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அது சாத்தியமில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறார்கள், கடலுக்கு அடியில் நகரத்தையே உருவாக்குகிறார்கள். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என கேள்வி எழுப்பி மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள் என மின்வாரிய அதிகாரிகளிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இதனால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்துள்ளனர்.