முதலமைச்சராகிறார் எஸ்.பி. வேலுமணி! ஒதுக்கப்படும் ஓபிஎஸ்- செய்தியாளர் சந்திப்பில் உளறிய ராஜேந்திர பாலாஜி

முதலமைச்சராகிறார் எஸ்.பி. வேலுமணி! ஒதுக்கப்படும் ஓபிஎஸ்- செய்தியாளர் சந்திப்பில் உளறிய ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, முதல்வர் அமெரிக்கா செல்வதால் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பொறுப்பு முதல்வராக நியமிக்கபடுவாரா என்பதை முதல்வர் எடப்பாடியே முடி வெடுப்பார் என தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், “ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்ததது அதிமுக அரசு, எழைகளுக்கு பால் ஊற்றியது திமுக அரசு. தமிழனின் வாழ்வுக்காகவும் பால் உற்பத்தியாளர்களின் வாழ்வுக்காகவும்தான் பால் விலை உயர்த்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தல் நவம்பரில் நடைபெற வாய்ப்புள்ளது. அன்னிய செலவாணி, பிக்பாக்கெட் போன்றவற்றை செய்பவர்கள்தான் தினகரனிடம் உள்ளனர். எடப்பாடியை குறை சொல்ல டிடிவி தினகரன் யோக்கியன் கிடையாது யோக்கிய மான அரசியல்வாதியும் கிடையாது. அம்மாவின் இறப்பிற்கு ஒரு வழியில் காரணமானவர்கள் டிடிவி தினகரன் குடும்பத்தினர். 

ப.சிதம்பரமும் கருணாநிதியும் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும், உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் என்பதை நிறுப்பித்துள்ளனர். ஆண்டவன் ஆட்டம் ஆரம்பமாகி விட்டது. ஒட்டு மொத்த காங்கிரஸ்காரர்களும் ஊழல்வாதிகள்தான். சிதம்பரம் போன்றவர்களுக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை. இந்தியாவின் நிலைப்பாட்டை எதிர்ப்பவன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுங்கள். இந்தியாவில் இருப்பவன் இந்தியனாக இரு. மோடி ஒரு இரும்பு மனிதர்” என்று தெரிவித்தார்.