பா.ம.க தேர்தல் வாக்குறுதிகளைப் பின்பற்றிய ஆம் ஆத்மி! – ராமதாஸ் ட்வீட்

பா.ம.க தேர்தல் வாக்குறுதிகளைப் பின்பற்றிய ஆம் ஆத்மி! – ராமதாஸ் ட்வீட்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் உள்ள பல அம்சங்களை ஏற்கனவே பா.ம.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று இரண்டு ட்வீட்களை வெளியிட்டுள்ளார்.

முதல் ட்வீட்டில், “தில்லி சட்டமன்ற தேர்தலுக்கான ஆம்ஆத்மி கட்சி தேர்தல் அறிக்கையில்  அறிவிக்கப்பட்ட 10 வாக்குறுதிகளில் இலவசக் கல்வி, மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி, தடையில்லா மின்சாரம், பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பெரும்பான்மையான  வாக்குறுதிகள் பாமகவால் ஏற்கனவே வழங்கப்பட்டவை என்பதில் மகிழ்ச்சி!” என்று கூறியுள்ளார்.

இரண்டாவது ட்வீட்டில், “திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையில் 75 ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுத்து, உழவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.