தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் தஞ்சம் ! பாஜக தலைவர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்ததால் பரபரப்பு !

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜகவில் தஞ்சம் ! பாஜக தலைவர் சுயேட்சையாக மனுதாக்கல் செய்ததால் பரபரப்பு !

தகுதி நீக்கம் செய்யபட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்த நிலையில் பாஜக தலைவர் சரத் பச்சே கௌடா ஹொஸ்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல்.

தகுதி நீக்கம் செய்யபட்ட காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பாஜகவில் இணைந்த நிலையில் பாஜக தலைவர் சரத் பச்சே கௌடா ஹொஸ்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல்.

mp

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள 17 சட்டமன்ற தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அனைவரும் அதிகாரப்பூர்வமாக எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் இவர்கள் அனைவரையும் நடக்கவிருக்கும் தேர்தலில் வேட்பாளராக பாஜக அறிவிக்க உள்ளது இந்நிலையில்  ல் பாஜக தலைவர் சரத் பச்சே கௌடா ஹொஸ்கோட்டை தொகுதியில் சுயேட்சையாக மனு தாக்கல். ஹொஸ்கோட்டை தொகுதியில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் தற்போது தகுதிநீக்கம் செய்யபட்டு பாஜகவில் இனைந்துள்ள எம்.டி.பி.நாகராஜ் அவருக்கு எதிராக போட்டியிட்ட சரத் பச்சே கௌடா 7,597 வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். தற்போது எம்.டி.பி.நாகராஜ் அவருக்கு பாஜக தேர்தலில் போட்டியிட வாய்பு கொடுத்துள்ளதால் அதிருப்தி அடைந்த சரத் பச்சே கௌடா சுயேட்சையாக இன்று மனு தாக்குதல் செய்தார்.