டி.டி.வி செய்தி டிவி சேனல் தொடங்கும் டி.டி.வி.தினகரன்… சசிகலாவிடம் இருந்து விலகி அதிரடி..!

 

டி.டி.வி செய்தி டிவி சேனல் தொடங்கும் டி.டி.வி.தினகரன்… சசிகலாவிடம் இருந்து விலகி அதிரடி..!

மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டி.டி.வி.தினகரனின் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ பெற்ற மிக மோசமான சரிவானது, அக்கட்சிக்குள் மிகப்பெரிய களேபரத்தை உருவாக்கியுள்ளது. சசிகலாவுடன் இடையில் பெரும் பிளவு உருவாக காரணமாகி, தினகரன் தனி அணியாக செயல்படுமளவுக்கு சூழல் உருவாகிவிட்டதுதான் அதிர்ச்சியே.

டி.டி.வி செய்தி டிவி சேனல் தொடங்கும் டி.டி.வி.தினகரன்… சசிகலாவிடம் இருந்து விலகி அதிரடி..!

மக்களவை, சட்டமன்ற இடைத் தேர்தல்களில் டி.டி.வி.தினகரனின் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ பெற்ற மிக மோசமான சரிவானது, அக்கட்சிக்குள் மிகப்பெரிய களேபரத்தை உருவாக்கியுள்ளது. சசிகலாவுடன் இடையில் பெரும் பிளவு உருவாக காரணமாகி, தினகரன் தனி அணியாக செயல்படுமளவுக்கு சூழல் உருவாகிவிட்டதுதான் அதிர்ச்சியே.

அதாவது தேர்தல் தோல்விக்குப் பின் உடனே தன்னை வந்து தினகரன் சந்திப்பார் என சசி நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே இளவரசி மகன் விவேக் மூலம் தினகரனை வரச்சொல்லி சேதி சொல்லிவிட்டார். இப்படி சின்ன பையன் மூலமாக தன்னை டீல் செய்வதை தினகரன் விரும்பாமல்தான் பரப்பன சிறைக்கு சசிகலாவை பார்க்க சென்றார். அப்போது விவேக்கும் வந்தார்.

தேர்தல் தோல்வி குறித்து தினகரனிடம் கடுமையாக பேசிய சசி, ‘அக்கா பேர்ல கட்சி துவங்கிட்டு இப்படியொரு தோல்வியா. அசிங்கம். உன்னோட திட்டமில்லாத செயல்பாடுகளும், அதீத தன்னம்பிக்கையும்தான் தோல்விக்கு காரணம்’ என்று சொல்லி திட்டினார். இதில் தினகரன் ஏக கோபம்.

இதன் பிறகு விவேக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா நியூஸ் சேனலில் தன்னைப் பற்றியோ, தங்கள் கட்சி பற்றியோ பெரிதாக காண்பிக்கப்படவில்லை என ஆத்திரம் அடைந்திருக்கிறார். இதற்கு பதில் சொன்ன விவேக், தினகரனும் அவரது நிர்வாகிகளும் தேவையில்லாமல் சேனல் நிர்வாகத்தில் தலையிட்டு அழுத்தம் கொடுப்பது பற்றி புகார் கூறியிருக்கிறார். இதிலும் விவேக்கின் பக்கமே சசிகலா நின்று இருக்கிறார்.

இதனால், கோபமாக வெளியேறிய டி.டி.விதினகரன் அதன் பின் ஜெயா டி.வி. குழுமம் பற்றி கண்டுக்கவேயில்லை. ஆனால், தன் அத்தை சசிகலா தன் பக்கம் இருப்பதை பார்த்துவிட்டு விவேக் சற்று இறங்கியடிக்க துவங்கினார். குறிப்பாக, அமைச்சரவை செய்திகளை சில காலமாக தவிர்த்து வந்த ஜெயா நியூஸ் சேனல், சமீபமாக அதையும் கவர் செய்ய துவங்கியது. சில அமைச்சர்கள் ‘அம்மா காலத்துல ஜெயா டி.வி. இருந்த ஃபீலிங் இப்ப மறுபடியும் வந்துடுச்சு. நியூஸ் ஜெ-வை விட அதுலதான் நம்ம நியூஸெல்லாம் விரிவா இருக்குது.’ என்று சந்தோஷித்திருக்கின்றனர்.

இந்த தகவல் தினகரனின் காதுகளுக்குப் போக, கோபத்தில் கொதித்திருக்கிறார். இருந்தாலும் ‘மறுபடியும் அந்த சின்ன பையன்ட்ட போயி கெஞ்ச வேணாம், சின்னம்மாட்ட சொன்னாலும் அவனை திட்ட மாட்டங்க. பேசாம நமக்குன்னு தனியா ஒரு சேனல் துவக்கிடலாம்.’ என்று ஸ்கெட்ச் போட்டுவிட்டார்.

புதிதாய் ஒரு சேனலுக்கு விண்ணப்பித்தால் டெல்லியிடம் போய் தொங்க வேண்டும். தினகரனின் சேனல் என்றால் சத்தியமாக பி.ஜே.பி. அரசில் பேப்பர் நகரவே நகராது. எனவே ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கும், அல்லது லைசென்ஸ் பெற்றிருக்கும் ஆனால் நஷ்டத்தில் இயங்கும் ஒரு சேனலை வாங்கி அதில் அமர்வது! எனும் முடிவுக்கு வந்துவிட்டாராம் தினகரன். சில சேனல்களின் பெயர்கள், நிர்வாகிகள், அவர்களின் பொருளாதார நிலை ஆகியவை பரிசீலிக்கப்பட்டு, தினகரனின் கவனத்துக்குப் போக, அவர் டிக் செய்த சேனல்களின் நிர்வாக தரப்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கூடிய விரைவில் ‘டிடிவி டி.வி.’ துவக்கப்படும் என தெரிகிறது. இந்த புதிய சேனல் துவங்கிய பின் தினகரனின் அரசியலும் புது ரூட்டில் இருக்கும் போல. தனது அரசியல் குருவான சசிகலா, தன்னை ஓவராக சோதிப்பதாலும், தன் மீது நம்பிக்கை இன்றி பேசுவதாலும் அவரை விட்டு விலகி நின்று அரசியல் செய்ய தயாராகிவிட்டாராம் தினகரன்.