கொரோனாவின் 100வது நாள்… மகிழ்ச்சி திரும்ப ராமதாஸ் வாழ்த்து!

கொரோனாவின் 100வது நாள்… மகிழ்ச்சி திரும்ப ராமதாஸ் வாழ்த்து!

கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆவதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு நிலை சில வாரங்களில் மாறி மக்கள் மகிழ்ச்சியில் திளைக்க வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.

கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆவதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு நிலை சில வாரங்களில் மாறி மக்கள் மகிழ்ச்சியில் திளைக்க வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆவதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். வுகான் நகரில் ஊரடங்கு முற்றிலுமாக விலக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ள நிலையில், உலகம் முழுக்க மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக் கணக்கில் கொத்துக்கொத்தாக மனிதர்கள் உயிரிழந்து வருகின்றனர். உலகின் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

corona-positive

இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “COVID19 கண்டுபிடிக்கப்பட்டதன் 100ஆவது நாள் இன்று. 100 நாட்களில் 200 நாடுகள்-பிராந்தியங்களில் பரவியிருக்கிறது கொரோனா. 400 கோடி மக்களை  முடக்கியிருக்கிறது. மக்களின் மகிழ்ச்சியைப் பதற்றமாக மாற்றியிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் இந்த நிலை மாறி உலகம் மகிழ்ச்சியில் திளைக்கட்டும்!” என்று கூறியுள்ளார்.