ஓ.பி.எஸ் மகனை போட்டுக் கொடுத்த உளவுத்துறை… ஓ.பி.ஆரை லெஃப் அண்ட் ரைட் வாங்கிய பாஜக!

 

ஓ.பி.எஸ் மகனை போட்டுக் கொடுத்த உளவுத்துறை… ஓ.பி.ஆரை லெஃப் அண்ட் ரைட் வாங்கிய பாஜக!

‘அண்ணே நீங்க தொகுதிக்குள்ளே வர்றப்ப மத்திய அமைச்சராதான் வரணும். அதுதான் இந்த மண்ணுக்கு கெத்து. வெறும் எம்.பி.யா சுத்துற மாதிரியா நீ ஜெயிச்சிருக்க? வரலாற்று வெற்றிண்ணே அது.

ஓ.பி.எஸ் மகனை போட்டுக் கொடுத்த உளவுத்துறை… ஓ.பி.ஆரை லெஃப் அண்ட் ரைட் வாங்கிய பாஜக!

அ.தி.மு.க.வில் எடப்பாடியார் அணியை விட, ஓ.பன்னீர்செல்வம் தரப்பான மோடி மற்றும் அமித்ஷாவுடனும், பி.ஜே.பி.யுடனும் மிக நெருக்கத்தில் இருப்பது நாடறிந்த ரகசியம். இந்த நிலையில், ஓ.பி.எஸ். மகன் குறித்த ஒரு அதிருப்தி ஒன்றை டெல்லி பி.ஜே.பி. வெளிப்படுத்த , அதை தமிழக பி.ஜே.பி. துணை முதல்வரின் காதுகளில் போட்டுள்ளது என்று ஒரு தகவல் படபடக்கிறது.

அதாவது நடந்து முடிந்த தேர்தலில் வென்ற எம்.பி.க்கள் மட்டுமில்லை, தோற்றுப்போனவர்களும் கூட ‘எதுக்கு அடுத்த தேர்தலுக்கு ஆகும்’ என்று சொல்லி வீதி வீதியாக சென்று ‘எனக்கு வாக்களித்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி’ என்று அவ்வப்போது வணங்கி வருகிறார்கள். ஆனால் கெத்தாக ஜெயித்திருக்கும் சிங்கிள் சிங்கமான ரவிந்திரநாத்தோ தேனி பக்கம் போவதேயில்லை. ரிசல்ட் வந்து இத்தனை நாளாச்சு அவர் தேனி பக்கமே தலை காட்டாததால் எதிர்கட்சிகளும், மக்களும் அவரை சீண்டிப் பேச துவங்கிட்டனர்.

தி.மு.க.வும் மக்களின் கோவத்தை மிக முழுமையாக உசுப்பி, ரவிக்கு எதிராக ரெளத்திரம் காட்ட வைத்துக் கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினருக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளதாம். இந்த தகவலானது எடப்பாடியாரின் கவனத்துக்குப் போனதும் அவர் டென்ஷனாகி இருக்கிறார். 

அதேபோல் பி.ஜே.பி.யின் தலைமை வட்டாரத்துக்கும் இந்த தகவலானது உளவுத்துறை மூலமாக போயிருக்கிறது. உடனே அவர்கள் தமிழக பி.ஜே.பி.யின் முக்கிய புள்ளிகளை அழைத்து சில விஷயங்களைச் சொல்லி இருக்கின்றனர். அவர்கள் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம், ”உங்க கட்சிக்கு உள்ளே ஆயிரம் பஞ்சாயத்துகள், பிரச்னைகள் இருக்கலாம். அது உங்க விஷயம். ஆனால் ஒரு லோக்சபா எம்.பி.யானவர் தனக்கு வாக்களித்த மக்களை சந்திச்சு நன்றி சொல்ல வேண்டியதும், அவங்களோட குறைகளை கேட்க வேண்டியதும் மிக மிக அவசியமான கடமை.

மத்திய மந்திரியானால்தான் தொகுதிக்குள் நுழைவேன் அப்படின்னு இருக்கிறது எந்த வகையில் நியாயம். தேனி தொகுதி மக்கள் ரவியோடு சேர்த்து மத்திய அரசையும் குறையாய் பேச துவங்கியிருக்காங்க. இது ஒரு தேச அரசுக்கு நல்லதில்லை. அதனால அவரை உடனடியா தொகுதிக்குள் சென்று மக்களை சந்திக்க சொல்லுங்க.” என்றார்களாம். துணை முதல்வர் பன்னீரும் மகனிடம் இது பற்றி தெளிவாக பேசினாராம்.

ஆனாலும் ரவியோ ’மத்திய அமைச்சராகாமல் தேனிக்குள் கால் வைப்பதில்லை.’ என்றிருக்கிறாராம்.  அதேபோல் அவரது ஆதரவு கோஷ்டிகளான அ.தி.மு.க. இளைஞரணியினரும் ‘அண்ணே நீங்க தொகுதிக்குள்ளே வர்றப்ப மத்திய அமைச்சராதான் வரணும். அதுதான் இந்த மண்ணுக்கு கெத்து. வெறும் எம்.பி.யா சுத்துற மாதிரியா நீ ஜெயிச்சிருக்க? வரலாற்று வெற்றிண்ணே அது. தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க.னு அத்தனை பேரையும் தூக்கி வீசி, அடிச்சு தூக்குன வெற்றி அது. அதனால விடாதே!” என்று உசுப்பேற்றி வருகிறார்களாம்.