ஊரடங்கு நீட்டிப்பா… நீக்கமா? உடனே அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 

ஊரடங்கு நீட்டிப்பா… நீக்கமா? உடனே அறிவிக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் அறிவித்த பிறகு தொலைக்காட்சியில் பேசிய மோடி மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது நீக்கப்படுமா என்பது பற்றி மக்களுக்கு உடனே அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவர் அறிவித்த பிறகு தொலைக்காட்சியில் பேசிய மோடி மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்றார். இதைத் தொடர்ந்து தமிழகத்திலும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு முடிய இன்னும் ஒரு சில நாட்கள்தான் உள்ளது.

lockdown-relaxation

ஊரடங்கு நீட்டிக்கப்படாது என்றால், மே 4ம் தேதி தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் தயாராவார்கள். திடீரென்று அறிவிக்கப்பட்டால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். இந்த நிலையில் ஊரடங்கு பற்றி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், ““கொரோனா நோய்த் தொற்று பரவிடாமல் தடுத்து நிறுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட இரண்டாவது ஊரடங்கு காலம், மே 3-ம் தேதியோடு முடிவடைகிற நிலையில், மேலும் இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, நீக்கப்படுமா அல்லது படிப்படியாகத் தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் குழப்பமும் மக்கள் மனதில் நிலவுகிறது. கொரோனா பரவலைத் தடுத்து மக்களைப் பாதுகாப்பதற்காக, மத்திய – மாநில அரசுகள் எடுக்கின்ற எந்த முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்பட்டு சமூக ஒழுங்கைத் தவறாமல் கடைப்பிடித்து ஒத்துழைக்க வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும்.

modi-with-mask

அதேநேரத்தில், ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்த்துவது குறித்து கடைசி நேரத்தில் அறிவித்து பதற்றத்தை அதிகரித்திடாமல், தக்க முடிவெடுத்து முன்கூட்டியே அறிவித்தால், பொதுமக்களிடம் தேவையற்ற பரபரப்பையும், பதற்றத்தையும் பெருமளவுக்குத் தவிர்க்க முடியும். 35 நாட்களுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் மக்களின் மனநிலையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய – மாநில அரசுகள் உரிய முடிவெடுத்து சிறிதும் தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.