ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாரி இறைத்தது இவர் பணமா? வெளியான பகீர் தகவல்

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வாரி இறைத்தது இவர் பணமா? வெளியான பகீர் தகவல்

டிடிவி தினகரனுக்கு விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: டிடிவி தினகரனுக்கு விவி மினரல்ஸ் உரிமையாளர் வைகுண்டராஜன் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த சோதனை இன்று முடிவடைந்ததாகவும், அதில் விவி மின்ரல்ஸ் வைகுண்டராஜன் குறித்த பல்வேறு ரகசியங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரன் டோக்கன் கொடுத்து வெற்றி பெற்றதாக அப்போதே செய்தித் தாள்களில் தகவல் வெளியாகியது. பல கட்ட சோதனைகளுக்குப் பின்னும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரன் தரப்பினர் கோடிக் கணக்கில் வாரி இறைத்ததாகவும் விவரமறிந்தவர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலின் போது டிடிவி தினகரனுக்கு 2.5 கோடி ரூபாய் பணத்தை வைகுண்டராஜன் கொடுத்ததற்கான ரகசிய ஆவணங்கள் வருமான வரித்துறையிடம் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.