அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

 

அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள்: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

ttv

முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் அமமுக தொண்டர்களுக்கு  எழுதிய கடிதத்தில், ‘சுத்த தங்கங்களான நீங்கள் இருக்கும் போது முலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் இங்கு யார் வருந்தப் போகிறார்கள். நெல்மணிகளோடு சில களைகளும் சேர்ந்து வளர்ந்து விடுவது வழக்கமானதுதான். துரோகத்தை வேரறுக்கத் தியாகத்தால் அணிவகுப்போம். ஒரு சிறு குழு விலகி செல்வதால் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டு விடாது. மீண்டும் இணைய அழைக்கும் துரோக கூட்டத்திற்குச் செல்லக்கூடாது. அமமுகவின் எழுச்சியைத் தடுத்து வளர்ச்சியை முடக்கும் முயற்சிகள் தீவிரமாக உள்ளது. அமமுகவை அழிக்க நினைப்பவர்கள் உயர் மின் அழுத்த மின்சாரத்தைத் தொடுவதற்கு சமம்’ என்று குறிப்பிட்டிருந்தார். 

 

இந்நிலையில், இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்  தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், ‘டிடிவி தினகரன் உட்பட அமமுகவினர் அனைவரும் திமுகவில் இணைவார்கள் எனவும் அதற்கு முன்னோட்டம்தான் செந்தில் பாலாஜியின் செயல் என்றும்  ராமாயணத்தில் கைகேயி புலம்பியது போல டிடிவி தினகரன் உச்சக்கட்டமாக புலம்பியிருப்பதாகக் கிண்டல் செய்துள்ளார். மேலும் நாளைக்கே இடைத்தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும்’ எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.