அத்துமீறி நாங்குநேரியில் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. தடுத்து நிறுத்தம்..!

 

அத்துமீறி நாங்குநேரியில் நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.பி. தடுத்து நிறுத்தம்..!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. மக்களும் தனது வாக்குகளை அளித்து வருகின்றனர். தேர்தல் நடக்கும் போது வெளியூரைச் சேர்ந்த எம்.எல்.ஏவோ அல்லது எம்.பியோ உள்ளே வரக் கூடாது என்பது தேர்தல் விதிமுறை. இந்நிலையில், கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் நாங்குநேரிக்குள் நுழைய முயன்ற போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். 

Vasanthakumar

அதனையடுத்து, தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரியினுள் நுழைய முயன்றதாகக் கூறி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரை நாங்குநேரி காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.