“மோடி முதல்வராகும்போது அவர் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லை; வாரிசு அரசியல் பற்றி பேசாதீர்கள்”

 
modi udhayanidhi stalin

உதயநிதியை ஒதுக்க நினைப்பது ஒருவித நவீன மனுதர்மமே என திமுக மாணவரனி தலைவர் ராஜீவ்காந்தி தெரிவித்துள்ளார்.

R.Rajiv Gandhi (@rajiv_dmk) / Twitter


திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்கிறார்.  ஆளுநர் மாளிகையில் காலை ஒன்பது முப்பது மணிக்கு இந்த பதவி ஏற்பு விழா நடைபெற இருக்கிறது. அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்துவைக்கவுள்ளார். இதற்கு திமுகவினர் வாழ்த்துகளை தெரிவித்துவந்தாலும், அதிமுகவினர் வாரிசு அரசியல், உதயநிதி ஸ்டாலினை இவ்வளவு அவசரமாக அமைச்சராக்க என்ன காரணம் என வசைப்பாடி வருகின்றனர். 

இந்நிலையில் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “இராஜராஜ சோழன்,இராஜேந்திர சோழன் என்று அரசர்களை தங்களின் பெருமை,அடையாளம் என கொண்டாடும் இந்த நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியை வாரிசு என்று வசைபாடி ஒதுக்க நினைப்பது ஒருவித நவீன மனுதர்மமே! குஜராத் முதவராகும் போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA கூட இல்லை மோடி! குறுக்கு வழியில் குஜராத் முதலமைச்சாராக வந்த மோடியை கொண்டாடுபவர்கள் எல்லாம் 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  MLA உதயநிதி அண்ணன் அவர்கள் அமைச்சராவதை விமர்சனம் செய்வதை பார்த்தா வேடிக்கையா இருக்கு!” எனக் குறிப்பிட்டுள்ளார்.