’’எடப்பாடியால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து’’

 
pa

எடப்பாடி பழனிச்சாமி,  கே. பி .முனுசாமி,  சிவி சண்முகம் ஆகியோரை பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்தி இருப்பதால் பொன்னையன் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்கிறார் அதிமுகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி. 

 அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருந்த புகழேந்தி தற்போது ஓபிஎஸ் பக்கம் நின்று அவருக்கு கை கொடுத்து வருகிறார்.  அவர் சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். 

 அப்போது,   ஓபிஎஸ் மகன் ஸ்டாலினை சந்தித்து பேசியதை எடப்பாடி தரப்பினர் கடுமயாக விமர்சித்து வருவது குறித்து,   நாடாளுமன்றத்தில் ஒரே அதிமுக உறுப்பினராக ரவீந்திரநாத் உள்ளார்.  ரவீந்திரநாத் முதலமைச்சர் பார்த்தது தவறு என்றால் நீங்களும் தான் முதலமைச்சரை சந்தித்து இருக்கிறீர்கள்.  ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் போது ஸ்டாலின் சந்தித்திருக்கிறார் என்று சொல்லிவிட்டு,  எடப்பாடி பழனிச்சமி,    கேபி முனுசாமி,  எஸ். பி. வேலுமணி,  ஜெயக்குமார் ஆகியோர் ஸ்டாலினுடன் கைகூப்பி நின்றிருக்கும் புகைப்படமும்,  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஸ்டாலின் நிற்கும் புகைப்படமும் தான் இவை என்று ஆதாரத்த காட்டினார்.

pu

தொடர்ந்து பேசிய புகழேந்தி,  ‘’ நாஞ்சில் கோலப்பானுடன் பொன்னையன் பேசிய ஆடியோ வெளியானதால் எடப்பாடி தரப்பினர் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.  எடப்பாடி பழனிச்சாமி,  கே பி முனுசாமி,  சீவி சண்முகம் ஆகியோர் பற்றிய பல உண்மைகளை அதில் பேசியிருக்கிறார் பொன்னையன்.  இதனால் அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது.  இதனால் பொன்னையனுக்கு  பலத்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தார்.

’’ ஓபிஎஸ் பற்றி கோகில இந்திரா தவறான வார்த்தைகளால் பேசுகிறார்.   கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக அவர் ஓபிஎஸ்ஐ எப்படியெல்லாம் அணுகினார்  என்பது எனக்குத் தெரியும்.   கே பி முனுசாமி நக்சலைட்டாக இருந்ததால் ஜெயலலிதா அவரை ஒதுக்கி வைத்ததாக பொன்னையன் கூறி இருக்கிறார்.  அதிமுக பொதுக் குழுவில் சாதி வெறி அதிகரித்திருப்பதை பார்க்க முடிந்தது.   அதிமுக தலைமை அலுவலகத்திற்கு நாங்கள் சென்றபோது எடப்பாடி பழனிச்சாமியைச் சார்ந்த வேறு மாவட்ட செயலாளர்களின் அடியாட்கள் எங்களை தாக்கினார்கள்.   இந்த சம்பவத்தில் போலீசார் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பல கொலைகள் நிகழ்ந்திருக்கும்’’ என்கிறார்.

’’ முதல்வர் வேட்பாளர்,  எதிர்க்கட்சித் தலைவர் போன்ற எல்லா இடங்களிலும் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமிக்கு விட்டு கொடுத்திருக்கிறார்.   கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு லட்சம் பேரும் ஓ.  பன்னீர்செல்வத்தை நோக்கி வரவேண்டும்.  அதிமுக சாதிக் கொள்கையில் போவது விரும்பாமல் பொன்னையன் உண்மையை பேசி இருக்கிறார்’’ என்றார்.

 ’’எல்லாவற்றிற்கும் காரணம் திமுக என்கிறார் எடப்பாடி.   ஆனால் திமுக நினைத்து இருந்தால் இந்த பொதுக்குழுவே நடந்திருக்காது.  வேலூர் ,காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா தொற்று காரணமாக 50 பேருக்கு மேல் கூட்டம் கூட அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்கவில்லை . அப்படி மட்டும் உத்தரவு பிறப்பித்து இருந்தால் பொதுக்குழுவே  நடந்திருக்காது . அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல நாங்கள் யாரை கேட்க வேண்டும்’’  என்று கேட்கிறார்.