ஸ்டாலின் முதல்வராகக் கூடாது… ரஜினிக்கு கொம்பு சீவும் பா.ஜ.க! – ஒத்து ஊதும் அ.தி.மு.க

 

ஸ்டாலின் முதல்வராகக் கூடாது… ரஜினிக்கு கொம்பு சீவும் பா.ஜ.க! – ஒத்து ஊதும் அ.தி.மு.க

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி நடக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மூன்றாண்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிடக் கூடாது என்று பா.ஜ.க கருதுவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவின் சமீபத்திய பேச்சு. நான் இருக்கும்வரை மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டேன் என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் அவர் பொங்கினார். 

மு.க.ஸ்டாலின் எந்த ஒரு சூழ்நிலையிலும் தமிழக முதல்வர் ஆகிவிடக் கூடாது என்று அவருக்கு எதிராக பா.ஜ.க மிகக் கடுமையான திட்டங்களைத் தீட்டி வருவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சொல்படி நடக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு மூன்றாண்டுகளை வெற்றிகரமாக முடித்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, மு.க.ஸ்டாலின் முதல்வராகிவிடக் கூடாது என்று பா.ஜ.க கருதுவதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடுதான் தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவின் சமீபத்திய பேச்சு. நான் இருக்கும்வரை மு.க.ஸ்டாலினை முதல்வர் ஆக விடமாட்டேன் என்று கிருஷ்ணகிரியில் நடந்த கூட்டத்தில் அவர் பொங்கினார். 

dmk-stalin.jpg

மு.க.ஸ்டாலினுக்கு எதிராக முரளிதரராவ் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தி.மு.க-வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்போம் என்று கூறலாம், ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வருவதைப் பற்றி எதுவும் கூறாமல், ஸ்டாலின் பெயரை மட்டும் குறிப்பிட்டு திரும்பத் திரும்ப பேசிவருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “நாடாளுமன்றத் தேர்தலின்போது வட இந்தியாவில் செல்வாக்கான தலைவர்களாக மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால் இருந்தாலும் அவர்களை எல்லாம் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை பா.ஜ.க பெற்றது. அதேபோல் தமிழகத்திலும் வெற்றி பெற்றுவிடலாம் என்று பா.ஜ.க நினைத்தது. ஆனால், அதை மு.க.ஸ்டாலின் சுக்குநூறாக உடைத்துவிட்டார். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசடன் கூட்டணி அமைத்து அதற்கு அதிக தொகுதிகள் கொடுத்து ஓரளவுக்குத் துடிப்புடன் இருக்க மு.க.ஸ்டாலின் காரணமாகிவிட்டார். கடந்த தேர்தலில் காங்கிரசை தி.மு.க ஒதுக்கியிருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைத்திருக்காது. இது பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்தது போன்ற வெற்றி சட்டமன்ற தேர்தலில் கிடைத்துவிடக் கூடாது என்று பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. இதற்கு ஏற்ற வகையில்தான் அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் மு.க.ஸ்டாலினை குறிவைத்து தாக்கி வருகின்றன. முரசொலி மூலப்பத்திரம் தொடங்கி பல்வேறு பிரச்னைகளை கிளப்பி ஸ்டாலினை சோர்வடைய வைப்பதே இவர்களின் திட்டம். இதற்குள்ளாக ரஜினி என்ற பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்தி தி.மு.க-வை ஆட்டம் காண வைத்து சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்று திட்டமிட்டு வருகிறது.முதல்வர் என்ற கனவில் உள்ள ரஜினி கட்டாயம் பா.ஜ.க-வில் இணைவார் அல்லது பா.ஜ.க கூட்டணியில் இடம் பெறுவார் என்று பா.ஜ.க உறுதியாக நம்புகிறது. ரஜினியை செதுக்கும் நபர்களும் பா.ஜ.க-வுக்கு இந்த உறுதி கொடுத்துள்ளார்களாம்.
தற்போது தேர்தல் வந்தாலும் தி.மு.க கூட்டணி 175க்கும் மேற்பட்ட இடங்களை பெறம் என்று கருத்துக் கணிப்புகள், ரகசிய சர்வே முடிவுகள் முதல்வரின் பார்வைக்கு போயுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதை மேலிட முதலாளிகளுக்குத் தெரிவித்துள்ளார். அவர்கள் வழிகாட்டுதலின்படி புதுப்புது திட்டங்களை அறிவித்து மக்களைக் கவர திட்டமிட்டு வருகிறார். இதற்குள்ளாக சசிகலாவும் விடுதலையாகி வந்துவிடுவார் என்பதால் சசிகலாவைக் கட்சியில் சேர்ப்பதற்கான திட்டமும் உள்ளது. 

bjp1.jpg

எல்லா பலத்தையும் ஒன்று சேர்த்து தி.மு.க-வை முடிக்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது என்று கூறுகின்றனர். 
இவை அனைத்தையும் தி.மு.க தரப்பும் அறிந்து வைத்துள்ளது. பிரஷாந்த் கிஷோர் பற்றி வெளியே கிண்டல் செய்தாலும் உள்ளுக்குள் அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு கிலி இருக்கத்தான் செய்கிறது. அதை தன்னுடைய சாதனையாக மு.க.ஸ்டாலின் கருதுகிறார். பிரஷாந்த் கிஷோர் வருகை காரணமாக திமுக கொள்கைகளுக்குப் பாதிப்பு வருமோ என்று மாவட்டச் செயலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கு மு.க.ஸ்டாலின், “பிரஷாந்த் கிஷோர் நிறுவனம்தான் நம்மிடம் வேலை செய்கிறது. நாம் அவர்களுக்கு வேலை செய்யவில்லை. அவர்கள் நம்முடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று உற்சாகமூட்டியுள்ளார். இதனால், தி.மு.க நிர்வாகிகள் உற்சாகமாகியுள்ளனர், அவர்களின் உற்சாகத்தை சிதைக்க என்ன செய்யலாம் என்று பா.ஜ.க யோசித்து வருகிறது.