சொத்து விவரத்தை சொல்வாரா ஜெயக்குமார்! பினாமி சொத்து விவரத்தையும் சொல்வாரா? அமைச்சர் சேகர்பாபு

 
ப்க்

திமுகவினரால் அதிலும் குறிப்பாக அமைச்சர்  செந்தில் பாலாஜியினால் அண்ணாமலையின் வாட்ச்  கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. அது குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  நாட்டில் எவ்வளவு பிரச்சனைகள் உள்ளன அவற்றை திசை திருப்புவதற்காக தான் இந்த விவகாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது நான் விலை உயர்ந்த வாட்ச் அணிவதில்லை எப்போதும் எளிமையாகவே இருப்பேன் என்று கூறியிருந்தார்.

ஜ்

அவர் மேலும்,   அண்ணாமலை வாட்ஸ் விவகாரம் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார் .  அவரின் வாட்சின் விலை ஐந்து லட்சம் ரூபாய் என்று அதற்கான ஆதாரத்தை தருகிறேன் என்றும் அவர் கூறிவிட்டார்.  மற்றபடி என் வாட்ச் பத்தாயிரம் ரூபாய் தான். ஆனால் மு. க. ஸ்டாலின்,  உதயநிதி ஸ்டாலின் கட்டும்  ஒரு வாட்ச் விலை எவ்வளவு என சொல்ல முடியுமா? அவர்கள் ஒவ்வொரு நாளும் பல லட்சம் மதிப்பு இல்லாத வாட்ச்சை கட்டுகிறார்கள் என்று கூறியிருந்தார்.

 இதற்கு அமைச்சர் பி .கே. சேகர்பாபு பதிலடி கொடுத்திருக்கிறார்.  முதல்வர் ஸ்டாலின் கைக்கடிகாரம் பற்றியும் ஜெயக்குமார் பேசியிருந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  ஜெயக்குமார் தனது சொத்து விவரத்தையும் தனது பினாமி சொத்து விவரத்தையும் சொன்னால் நன்றாக இருக்கும் என்றார்.

மேலும்,   ஜெயக்குமார் வெளிப்பதைத் தன்மையோடு நடந்து கொள்ளட்டும்.   அதன் பின்னர் மற்றவர்களை பார்த்து வெளிப்படை தன்மையுடன் இருங்கள் என்று அவர் சொல்லலாம் என்று கூறி இருக்கிறார் .  

அவர் மேலும் ஜெயக்குமார் தனது இருப்பை காட்டிக் கொள்வதற்காகவே இப்படி பேசி வருகிறார்.   இதையெல்லாம் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.  1991ல் ஜெயக்குமார் சம்பாதித்த சொத்து எவ்வளவு என்று அவரால் கூற முடியுமா? இப்போது அவருக்கும் அவரது பெயர்களிலும் எவ்வளவு சொத்து இருக்கிறது என்பதை துணிச்சலாக அவரால் வெளியிட முடியுமா என்ற அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்திருக்கிறார்.