சசிகலா புஷ்பாதான் அழுகிய முட்டை - அமைச்சர் கீதா ஜீவன் கலகல

 
ge

சசிகலா புஷ்பா தான் அழுகிய முட்டை என்றதும்  அமைச்சர் கீதாஜீவன் உள்பட அங்கிருந்தோர் அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.   திமுகவை விமர்சிக்கும் அண்ணாமலையின் மேடை மீதே ஏறிவிடுவோம் என்று எச்சரித்திருந்தார் கீதா ஜீவன்.  இதற்கு சசிகலா புஷ்பா, கீதா ஜீவனின் நாக்கு இருக்காது.  காலை வெட்டுவோம் என்றார்.  இதனால் சசிகலா புஷ்பாவின் வீடு தாக்கப்பட்டது. இந்நிலையில் அழுகிய முட்டை என்று சசிகலாபுஷ்பாவை தாக்கினர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.  

g

 75 கர்ப்பிணி தாய்மார்களுக்கு 10க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்களை அவர் வழங்கினார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது அழுகிய முட்டை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அமைச்சர் கீதா ஜீவன்,   தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் படிக்கும் 36 லட்சம் பேருக்கு முதல்வரின் ஊட்டச்சத்து உறுதி செய்யும் திட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ஒன்பது லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என கண்டறியப்பட்டிருக்கிறது என்றார்.

 அவர் மேலும்,   ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கின்ற வகையில் சத்தான உணவு வழங்குவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதனை உறுதி செய்கின்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.   ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள் கடுமையான பாதிப்பு,  நடுத்தரமான பாதிப்பு என்று பிரிக்கப்பட்டு அக்குழந்தைகளுக்கு இரண்டு மாத காலம் வழங்கும் வகையிலான சிறப்பு இனிப்பு வகை ஒன்றை அறிமுகம் செய்து முதலமைச்சர் உத்தரவுப்படி மக்கள் நல்வாழ்வுத்துறை மூலம் வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது என்றார்.

sa

 சத்துணவு திட்டத்தில் அழுகிய முட்டை எந்த இடத்திலும் குழந்தைகளுக்கு விநியோகம் செய்யப்படவில்லை.   தண்ணீரில் மிதக்கக்கூடிய முட்டைகள் மற்றும் அழுகிய முட்டைகளை திருப்பி அனுப்புவதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து படம் எடுத்து பரப்பி வருகிறார்கள்.  1996 ஆம் ஆண்டிலிருந்து அழுகிய முட்டைகளை திரும்பப்பெறும் பணி பின்பற்றப்பட்டு  வருகிறது.  

 அதே நடைமுறையில் தான் இப்போதும் பின்பற்றப்படுகிறது.   அதனால் பாஜகவினர் கருப்புக்கொடி காட்டி கைது செய்யப்பட்ட தகவல் செய்தியாளர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என்ற கீதா ஜீவன்,  வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என என்று பாஜகவினர் பேசக்கூடாது என்றார்.

 அமைச்சர் கீதா ஜீவன்  பேட்டிக்கு இடையே,  முன்னாள் அதிமுக எம்பியும் தற்போதைய தமிழக பாஜக துணைத் தலைவருமான சசிகலா புஷ்பாவை, விமர்சித்தார் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்,  திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளருமான அப்துல் வகாப்.  சசிகலா புஷ்பா தான் அழுகிய முட்டை என்று சொன்னதும்,  அமைச்சர் உட்பட அங்கிருந்தோர் கலகலவென்று சிரித்தனர்.