ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை மதிக்காத பா.ஜ…… திரியை கொளுத்தி போடும் பிரியங்கா காந்தி…….

 

ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை மதிக்காத பா.ஜ…… திரியை கொளுத்தி போடும் பிரியங்கா காந்தி…….

மோடிஜியும் அவரது அரசாங்கமும் இனி ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை மதிக்காது என நினைக்கிறேன் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசுகையில், இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்கள் இடஒதுக்கீடுக்கு எதிரானவர்களின் கருத்தை கேட்க வேண்டும், அதுமாதிரி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களின் கருத்தும் கேட்க வேண்டும். அப்படி நடந்தால் எந்தவித சட்டம் மற்றும் விதிமுறைகள் இன்றி ஒரு நிமிடத்தில் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டு பிடித்து விடலாம் என்று தெரிவித்தார்.

மோகன் பாகவத்

மோகன் பாகவத்தின் பேச்சு, ஏழைகள் மற்றும் பின்தங்கிய வகுப்பினரின் இடஒதுக்கீட்டுக்கு முடிவு கட்டும் நோக்கத்தில் பா.ஜ. அரசு நோக்கத்தில் உள்ளதாக சர்ச்சை கிளம்பியது. இதனையடுத்து மோகன் பாகவத் பேச்சு குறித்து ஆர்.எஸ்.எஸ்.  விளக்கம் அளித்தது. இடஒதுக்கீடு உள்பட சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் நல்ல பேச்சுவார்த்தை வாயிலாக தீர்க்க முடியும் என்பதை தான் அவர் குறிப்பிட்டார் என ஆர்.எஸ்.எஸ். டிவிட் செய்து இருந்தது.

நரேந்திர மோடி

மோகன் பாகவத் பேச்சு தொடர்பான ஆர்.எஸ்.எஸ். விளக்கத்தை குறிப்பிட்டு காஷ்மீர் விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை பிரதமர் மோடி மதிக்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்தார். இது தொடர்பாக பிரியங்கா டிவிட்டரில், நல்ல பேச்சுவார்த்தை வாயிலாக சமூகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் கட்டாயம் தீர்வு காணலாம்? என ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. மோடிஜியும் அவரது அரசும் இனி ஆர்.எஸ்.எஸ். கண்ணோட்டத்தை இனி மதிக்காது அல்லது ஜம்மு காஷ்மீரில் பிரச்சினை இருப்பதாக நம்பாது என நான் நினைக்கிறேன். சுவாஸ்ரயமானது. என்று பதிவு செய்து இருந்தார்