அமித்ஷா மீது நடவடிக்கை… அமெரிக்கா ஆணையம் வலியுறுத்தல்!

 

அமித்ஷா மீது நடவடிக்கை… அமெரிக்கா ஆணையம் வலியுறுத்தல்!

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்த அமித்ஷா மீது அமெரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மத சுந்தரத்துக்கான ஆணையம் இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா அபாயகரமான வழியில் அபாயகரமான திருப்பம் என்று குறிப்பிட்டுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்த அமித்ஷா மீது அமெரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையம் வலியுறுத்தியுள்ளது.அமெரிக்காவின் மத சுந்தரத்துக்கான ஆணையம் இந்தியா கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதா அபாயகரமான வழியில் அபாயகரமான திருப்பம் என்று குறிப்பிட்டுள்ளது.

amit sha

இந்த புதிய திருத்தத்தின் படி 2014 டிசம்பர் 31க்கு முன்பாக மத அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்த இந்து, சீக்கியர், புத்த மதத்தவர்கள், ஜெயினர்கள், பார்சி, கிறிஸ்தவர்கள் சட்ட விரோத குடியேறிகளாக கருதப்படாமல் அவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழிவகை செய்கிறது. இதில் இஸ்லாமியர்கள் இடம் பெறவில்லை. அதேபோல், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்த அகதிகள் பற்றி எந்த கருத்தும் கூறப்படவில்லை.

dmk

இந்த புதிய திருத்தத்துக்குக் காங்கிரஸ், தி.மு.க, சிவ சேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மிக அபாயகரமான சட்டத்தைக் கொண்டுவந்ததற்காக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவில் கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமொிக்காவின் சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய சட்டத் திருத்தத்துக்கு இந்தியாவின் இரண்டு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்டால் அமித் ஷா மற்றும் இந்த சட்டம் கொண்டுவர காரணமாக இருந்த முக்கிய தலைவர்கள் மீது அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

comission

இந்த திருத்த மசோதாவில் இஸ்லாமியர்களை மட்டும் தனித்துவிட்டுள்ளார்கள். மதம் அடிப்படையில் குடியுரிமை என்று கொண்டுவந்துள்ளார்கள். இது ஆபத்தான பாதை பயணத்தில் ஆபத்தான திருப்பம் ஆகும். இது இந்தியாவின் செழுமைமிக்க மதச்சார்பற்ற தன்மைக்கும் சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்று சொல்லும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் எதிரானதாகும்.
மனித உரிமை மற்றும் மதச் சதந்திரத்துக்கு எதிராக செயல்படும் நபர்கள் மீது அமெரிக்க அரசு குறிப்பாக அமெரிக்க ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.