அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரங்களுக்கு தடையில்லை!

 

அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரங்களுக்கு தடையில்லை!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் அனல்பறக்கின்றன. பொதுக்கூட்டங்களுக்கு அரசு அனுமதி வழங்குவதற்கு முன்னரே திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டம் கூட்டியதால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் தேர்தல் பிரச்சாரங்களை கருத்தில் கொண்டு அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களுக்கு அனுமதி அளித்தது.

அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரங்களுக்கு தடையில்லை!

அனுமதி வழங்கிய முதல் நாளே முதல்வர் பழனிசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரச்சாரங்களின் போது தொண்டர்கள் கூட்டம் அலைமோதுவதால், பிரச்சாரங்களின் போது வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால், அரசியல் கூட்டங்களுக்கு தடைக் கோரி கே.கே.ரமேஷ் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

அரசியல் பொதுக்கூட்டம், பிரச்சாரங்களுக்கு தடையில்லை!

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு போதுமான அளவு நடவடிக்கை எடுத்து வருவதால் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அரசியல் கட்சியினர் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடையில்லை என உத்தரவு பிறப்பித்து வழக்கை முடித்து வைத்தனர்.