டெல்லி வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தம் இல்லை : அரசியல் பின்புலமா?

 

டெல்லி வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தம் இல்லை : அரசியல் பின்புலமா?

டெல்லியில் நடைபெறும் வன்முறைக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது.

டெல்லியில் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரின் தடையை மீறி விவசாயிகள் முன்னேறிச் செல்வதால் அவர்கள் மீது தடியடி நடத்துவதும், விவசாயிகள் டிராக்டர்களை கொண்டு போலீசாரை தாக்குவதும் என டெல்லியே கலவர பூமியாக மாறியிருக்கிறது. அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து செங்கோட்டையையே முற்றுகையிடும் அளவிற்கு போராட்டம் வலுத்துள்ளது.

டெல்லி வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தம் இல்லை : அரசியல் பின்புலமா?

அதுமட்டுமில்லாமல், டெல்லி காவல்துறை தலைமையகத்தையும் விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். அலுவலகத்தை சுற்றியும் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களை நிறுத்தி வைத்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு டெல்லி போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டும், விவசாயிகள் போராட்டத்தை தொடருவதால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.

டெல்லி வன்முறைக்கும் விவசாயிகளுக்கும் சம்பந்தம் இல்லை : அரசியல் பின்புலமா?

இந்த நிலையில், போராட்டத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லையென பாரதிய கிசான் சங்கம் அறிவித்துள்ளது. அரசியல் பின்புலத்தில் இருந்து விவசாயிகள் பேரணியில் பங்கேற்றவர்கள் தான் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ளோம்; விரைவில் அவர்களை பிடித்து தருவோம் என்றும் தெரிவித்துள்ளது.

பேரணியின் போது விவசாய சங்கத் தலைவர்களை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்திருக்கும் நிலையில், டெல்லி கலவரத்தின் பின்புலத்தில் அரசியல் கட்சிகளின் தொடர்பு இருப்பதாக கிசான் சங்கம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.