புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி

 

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அரசியல் தலைவர்களும் வீரமரணம் அடைந்த அஞ்சலி செலுத்துகின்றனர்.
2019 பிப்ரவரி 14ம் தேதியன்று காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ் இ முகமது இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதற்கு பதிலடியாக அந்த மாதம் 26ம் தேதியன்று இந்திய விமான படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குறைந்தபட்சம் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி
புல்வாமா தீவிரவாத தாக்குதல்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களின் 2வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. ராகுல் காந்தி, ஜே.பி. நட்டா, கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மற்றும் மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் வீரமரணம் அடைந்த 40 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம்… இன்று 2ம் ஆண்டு நினைவஞ்சலி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில், புல்வாமா தீவிரவாத தாக்குதலில் இறந்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி. நாடு உங்களுக்கு கடன்பட்டிருப்பதால் அவர்களது குடும்பங்களுக்கு அஞ்சலி என்று பதிவு செய்து இருந்தார்.