வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

 

வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

வருகிற 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நாடு முழுவதும் நடைபெறுகிறது.

கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகளை சொட்டு மருந்து மையம் அழைத்து வருவதையோ, மருந்து போடுவதையோ தவிர்க்க வேண்டும் எனவும் கொரோனாவிலிருந்து மீண்ட குழந்தைகள் போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்!

தமிழகத்தில் 43 ஆயிரத்து 51 பூத்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்படவுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போடப்படும். கொரோனா அறிகுறிகளான சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை இருந்தால் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவமனைகளில் போட்டிருந்தாலும் மீண்டும் போட்டுக் கொள்ள வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு நடமாடும் வாகனங்கள் களத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், டோல் பிளாசா ஆகிய இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்படவுள்ளது. சுமார் 2 லட்சம் சுகாதார ஊழியர்கள் போலியோ சொட்டுமருந்து போடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா பாதிக்கப்பட்டு மீண்ட குழந்தைகள் போலியோ சொட்டு மருந்தை போட்டுக் கொள்ள தடை இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவதால் வரும் ஞாயிற்றுகிழமை கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.