பொது மக்களிடம் அத்துமீறிய சென்னை போலீசார் பட்டியல் ரெடி! – கவுன்சலிங் வழங்க ஏற்பாடு

 

பொது மக்களிடம் அத்துமீறிய சென்னை போலீசார் பட்டியல் ரெடி! – கவுன்சலிங் வழங்க ஏற்பாடு

சென்னை மாநகர காவலில் பொது மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவலர்கள் பட்டியலை தயார் செய்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் போலீஸ் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் வந்துகொண்டிருந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் ஒட்டுமொத்தமாக போலீசார் மீது இருந்த மதிப்பைச் சிதைத்துவிட்டது. ஒரு சிலர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த காவல் துறையும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும் இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களிடம் அத்துமீறிய சென்னை போலீசார் பட்டியல் ரெடி! – கவுன்சலிங் வழங்க ஏற்பாடுஅந்த வகையில், திருச்சியில் அத்துமீறி நடந்துகொள்ளும் 80 போலீசார் பணியிலிருந்து விலக்கப்பட்டு, மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்ட காவலர்கள் பட்டியலை தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தந்தந்த காவல் நிலையம், உதவி, துணை ஆணையர் என அனைவரிடமும் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. இதுதவிர 100 போலீஸ் அவசர உதவி எண்ணைத் தொடர்புகொண்டு அளிக்கப்பட்ட புகார்கள் அடிப்படையிலும் பட்டியல் தயாராகியுள்ளது.

பொது மக்களிடம் அத்துமீறிய சென்னை போலீசார் பட்டியல் ரெடி! – கவுன்சலிங் வழங்க ஏற்பாடுஇந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு தற்காலிக ஓய்வு, மனநல பயிற்சி, பொது மக்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது தொடர்பான கவுன்சலிங் வழக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுபோன்று ஒவ்வொரு மாவட்ட காவல்துறையும் நடவடிக்கை எடுத்தால் காவல்துறை உண்மையில் நண்பனாகவே இருக்கும்!