ரம்மி விளையாடி… பணம் இழப்பு… மாயமான போலீஸ்காரர்!- கண்ணீருடன் தவிக்கும் மனைவி

ஆன்-லைனில் ரம்மி விளையாடி பணத்தை இழந்த போலீஸ்காரர் ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். தனது கணவரை கண்டுபிடித்து தரும்படி காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார் மனைவி. இந்த சோக சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மொட்டமலையில் தமிழக அரசின் 11வது பட்டாலியன் படை பிரிவு உள்ளது. இங்கு காவலராக பணியாற்றி வருகிறார் சேரன் பாண்டியன், 27 வயதான தனது மனைவியுடன் காவலர் புதிய குடியிருப்பில் குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் நடந்த ஊரடங்கால் வீட்டில் இருந்த சேரன்பாண்டியன், பொழுது போக்கிற்காக ஆன்-லைனில் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ரம்மி விளையாட்டின் மீதான ஆர்வத்தால் விளையாடி பணத்தை இழந்துள்ளார். இதனால் கடனில் சிக்கியுள்ளார் சேரன்பாண்டியன். கடனை அடைப்பதற்காக மனைவியின் நகையை அடமானம் வைத்து கடனை அடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சேரன்பாண்டியன் கடந்த 20ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, வன்னியம்பட்டி காவல்நிலையத்தில், தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காவலர் சேரன் பாண்டியனை தேடி வருகின்றனர்.

Most Popular

மதுரையில் 2 வது நாளாக 100க்கும் கீழ் பதிவான கொரோனா தொற்று!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...

இதுவரை உலகளவில் 1.86 கோடி பேருக்கு கொரோனா!

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதனால்...

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது!

கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதுவரை இதுவரை உலகம் முழுவதும்...

ஆசைவார்த்தை… 9 மாதமாக உல்லாசம்… கர்ப்பமான 13 வயது சிறுமி!- போக்ஸோவில் சிக்கிய இளைஞர்

ஆசைவார்த்தை காட்டி 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்ஸோவில் கைது செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவெண்காடு பஞ்சந்தாங்கி தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் அருண் (26). டைல்ஸ் வேலை பார்த்து...