ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் வெங்கடேஷ் தற்கொலை!

 

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் வெங்கடேஷ் தற்கொலை!

தலைவாசல் காவல் நிலையத்தில் பணிபுரியும் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேஷ் , வட்டிக்கு வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தினால் பணத்தை தொலைத்ததால், வாங்கிய கடன் தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் மனமுடைந்து அவர் தங்கியிருந்த அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தருமபுரி அண்ணாதெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் [வயது 28] இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு போச்சம்பள்ளியில் உள்ள பட்டாலியன் போலீசில் பணியில் சேர்ந்துள்ளார். பின்னர் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் தங்கி அங்கிருந்து ஆத்தூர் உட்கோட்டம் தலைவாசல் காவல் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறப்பு காவல் படை காவலராக வெங்கடேஷ் பணிபுரிந்து வருகிறார்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் வெங்கடேஷ் தற்கொலை!

இந்நிலையில் நேற்று இரவு அவரது தம்பி ஹரிராஜன் என்பவருக்கு போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் பணிபுரியும் (வேலு) காவலரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கும் மேல் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்ததால் கொடுத்த கடனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. ஆனால், கடனை திரும்ப தரும்படி சவுரிராஜனை நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று விரக்தியில் பேசியதாக தெரியவர, ஹரிராஜன் மற்றும் அவரது அத்தை மகன் வெற்றிவேல் இருவரும் தர்மபுரியில் இருந்து, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு தலைவாசல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தங்கியுள்ள வெங்கடேசனை காண சென்றனர்.

அங்கு சென்று பார்த்தபோது அவர் தங்கியிருந்த அறையில் லுங்கியில் தூக்கிலிட்டு தொங்கி இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் அறைக்குள் சென்றுஅவரை மீட்டு 108 வாகனத்தை வரசொல்லி வாகனத்தில் ஏற்றிய போது வெங்கடேஷன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பின் தலைவாசல் போலீசாரிடம் தகவல் தெவிவித்துள்ளனர்.

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்த காவலர் வெங்கடேஷ் தற்கொலை!

சம்பவ இடத்திற்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் குமரவேல் பாண்டியன், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சக ஊழியர்களே வாங்கிய கடனை திரும்ப கேட்டு நெருக்கடி கொடுத்ததால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, .