‘போர்க்களமாக மாறிய டெல்லி’ : பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி!

 

‘போர்க்களமாக மாறிய டெல்லி’ : பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி!

டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் கணீர் புகை குண்டுகளை வீசினர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், இன்று 3 லட்சம் டிராக்டர்களில் பிரம்மாண்ட பேரணி நடத்தவிருப்பதாக அறிவித்தனர். அதன் படி பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் தேசியக் கொடி கட்டி டெல்லிக்கு படையெடுத்த நிலையில், சிங்கு எல்லையில் இருந்து மாபெரும் பேரணி தொடங்கியது. சிங்குவில் மட்டும் 50,000 டிராக்டர்களில் பேரணி நடைபெறுகிறது.

‘போர்க்களமாக மாறிய டெல்லி’ : பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி!

டெல்லியின் 5 எல்லைகளில் இருந்து பேரணி நடைபெற உள்ளதாக விவசாயிகள் ஏற்கனவே அறிவித்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட டெல்லி போலீசார், குடியரசு தின விழா காரணமாக பிற்பகல் 12 மணிக்கு மேல் பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். ஆனால், போலீசாரின் அறிவுறுத்தலை மீறி திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னரே விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைந்தனர். விவசாயிகளை அங்கிருந்து கலைக்க சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால், போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

‘போர்க்களமாக மாறிய டெல்லி’ : பேரணி நடத்தும் விவசாயிகள் மீது போலீசார் தடியடி!

சினங்கொண்ட விவசாயிகள் போலீசாருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, முன்னேறிச் செல்ல முயலுவதால் டெல்லியின் சிங்கு எல்லையில் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லியில் குடியரசு தினவிழாவும் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.