‘மாஸ்க் போடாத தம்பதியிடம்’ சாதிப் பெயர் கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

 

‘மாஸ்க் போடாத தம்பதியிடம்’ சாதிப் பெயர் கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

திருப்பூர் அருகே மாஸ்க் போடாமல் சென்ற தம்பதியிடம் காவலர் ஜாதிப்பெயர் கேட்டது சர்ச்சையான நிலையில், அந்த காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் எல்லாரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதனை கண்காணிக்க, திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் நடராஜன் மற்றும் காசிராஜன் ஆகியோர் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த சிவக்குமார் மற்றும் அவரது மனைவி மாஸ்க் போடவில்லையாம்.

‘மாஸ்க் போடாத தம்பதியிடம்’ சாதிப் பெயர் கேட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

இதனால் அவர்களுக்கு அபராதம் விதித்த காவலர் காசிராஜன், அவர்களது விவரங்களை நோட்டில் எழுதும் போது சாதிப் பெயர் என்னவென்று கேட்டுள்ளார். இதனால் கடுப்பான சிவக்குமார், காசிராஜனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், காவலர் காசிராஜனை ஆயுதப்படைக்கு மாற்றி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.