நடிகர் செந்தில் அளித்த புகார்… காவல்துறை உடனடி நடவடிக்கை!

 

நடிகர் செந்தில் அளித்த புகார்… காவல்துறை உடனடி நடவடிக்கை!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் செந்தில், நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக தான் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டதை போல போலி கணக்கின் மூலம் சிலர் அவதூறு பரப்பி வருவதாக புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

நடிகர் செந்தில் அளித்த புகார்… காவல்துறை உடனடி நடவடிக்கை!

எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ள அந்த விஷக்கிருமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த பதிவை நீக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நடிகர் செந்தில் பெயரில் உருவாக்கப்பட்ட போலி ட்விட்டர் கணக்கை நீக்கி இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், நடிகர் செந்தில் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி அந்த போலி டுவிட்டர் கணக்கை நீக்கிவிட்டனர். செந்தில் பெயரில் போலியான கணக்கை தொடங்கிய நபர் யார் என்பதை கண்டறியும் பணி தொடங்கியுள்ளது. மக்கள் ஒரு ஐடியை பின்பற்றும் போது, முறையாக சரிபார்த்துவிட்டு பின்தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளது.