“உங்கள போலீசாக்குறது என் பொறுப்பு ” : போலி சப் – இன்ஸ்பெக்டரை நம்பி ஏமாந்த இளைஞர்கள்; நிஜ போலீசாரிடம் சிக்கிய சோகம்!

“உங்கள போலீசாக்குறது என் பொறுப்பு ” : போலி சப் – இன்ஸ்பெக்டரை நம்பி ஏமாந்த இளைஞர்கள்;  நிஜ போலீசாரிடம் சிக்கிய சோகம்!

எஸ்ஐ தேர்வுக்கு வினாத்தாள்களை பெற்றுத் தருவதாக கூறி பணம் பறித்த போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

“உங்கள போலீசாக்குறது என் பொறுப்பு ” : போலி சப் – இன்ஸ்பெக்டரை நம்பி ஏமாந்த இளைஞர்கள்;  நிஜ போலீசாரிடம் சிக்கிய சோகம்!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் வினோத் குமார். இவர் தன்னை சப்-இன்ஸ்பெக்டர் என்று கூறிக்கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார். அத்துடன் போலீஸ் சீருடையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு பலரிடமும் பணம் பறித்துள்ளார். தனது சமூக வலைத்தள பக்கங்களில் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர் சீருடை அணிந்து இவர் பதிவிட்ட புகைப்படங்களை கண்ட கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வினோத்குமாருக்கு நண்பர்களாக மாறியுள்ளனர்.

“உங்கள போலீசாக்குறது என் பொறுப்பு ” : போலி சப் – இன்ஸ்பெக்டரை நம்பி ஏமாந்த இளைஞர்கள்;  நிஜ போலீசாரிடம் சிக்கிய சோகம்!

இவர்களிடம் எஸ்ஐ தேர்வுக்கான வினாத்தாள்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். வினோத்குமார் கூறியதை நம்பிய அந்த இளைஞர்கள் வினோத்குமாரிடம் ரூ.3 ஆயிரம் பணம் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட வினோத்குமார் இளைஞர்களை தனது காரில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். அப்போது காரானது ஒரு பள்ளத்தில் இறங்கி உள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு நிஜ போலீசார் வந்துள்ளனர். அவர்கள் வினோத்குமாரிடம் நடத்திய விசாரணையில் அவர் போலி சப்-இன்ஸ்பெக்டர் என்பது இளைஞர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து இளைஞர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வினோத் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கோத்தகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஏற்கனவே வினோத் குமார் மீது கோவை சரவணம்பட்டி ,மேட்டுப்பாளையம், கோத்தகிரி போலீஸ் நிலையங்களில் 4 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.