காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி.. மூடப்பட்ட காவல் நிலையம்!

 

காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி.. மூடப்பட்ட காவல் நிலையம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியதைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கால் மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொள்ளுமாறு முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் கொரோனா பரவி வருவது அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி.. மூடப்பட்ட காவல் நிலையம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் 594 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரிய பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கடந்த 2 நாட்களாக கொரோனா அறிகுறி இருந்து வந்ததையடுத்து, அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் காவல் உதவி ஆய்வாளருக்கு கொரோனா உறுதி செய்யப் பட்டதால் அவர் ,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் பணிபுரிந்த காவல் நிலையம் தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும், அவருடன் பணியாற்றிய காவலர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.