பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!

 

பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!

தங்கக்கடத்தலில் சிக்கியுள்ள உயர்கல்வி அமைச்சர் ஜலீல் பதவி விலகக்கோரி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!

முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி தொடர்ந்து மனுதாக்கல் செய்து வந்தாலும் அவரின் மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர், அப்துல் மற்றும் ஜிப்சாலுக்கு ஜாமீன் வழங்கி கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தங்கட கடத்தல் வழக்கில் உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீல் சிக்கியுள்ளது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!

இந்நிலையில் தங்கக்கடத்தலில் சிக்கியுள்ள உயர்கல்வி அமைச்சர் ஜலீல் பதவி விலகக்கோரி பெண்கள் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர். கேரளாவில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட பாஜகவினரை தண்ணீர் பீய்ச்சி அடித்து போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பாஜகவினர் மீது போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிப்பு!

தங்க கடத்தல் வழக்கில் அமலாக்க துறையினர் ஏற்கனவே 2 முறை அமைச்சர் ஜலீலை விசாரணை நடத்திய நிலையில் மூன்றாவது முறையாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.