பறிமுதல் செய்த வாகனத்தை வழங்க கோரி, விளம்பர பேனர் கம்பம் மீது ஏறி இளைஞர் போராட்டம்!

 

பறிமுதல் செய்த வாகனத்தை வழங்க கோரி, விளம்பர பேனர் கம்பம் மீது ஏறி இளைஞர் போராட்டம்!

சேலம்

போலீசார் பறிமுதல் செய்த மோட்டார் சைக்கிளை விடுவிக்கக் கோரி, சேலத்தில் விளம்பர பேனர் கம்பியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அழகாபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (36). கூலி தொழிலாளி. இவர் உறவினரின் மோட்டார் சைக்கிளில் ஓட்டிச்சென்ற போது, சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்ததாக கூறி அபராதம் விதிக்க முயன்று உள்ளனர். வாகன ஆவணங்களை கேட்டபோது, தனது உறவினரின் வாகனத்தை எடுத்து வந்ததை தெரிவித்த சரவணன், பின்னர் வீட்டில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்று காண்பித்து உள்ளார். ஆயினும், போலீசார் வாகனத்தை தராமல் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது.

பறிமுதல் செய்த வாகனத்தை வழங்க கோரி, விளம்பர பேனர் கம்பம் மீது ஏறி இளைஞர் போராட்டம்!

இதனால் ஆத்திரமடைந்த சரவணன், இன்று சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே விளம்பர பேனர் கம்பியின் மீது ஏறிக்கொண்டு வாகனத்தை திருப்பி தரக்கோரி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரிடம் கீழே இறங்கும் படி வலியுறுத்தினர். ஆனால், மோட்டார் சைக்கிளை வழங்காமல் போலீசார், தன்னை அவமதிப்பு செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாக கூறி இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த சேலம் துணை ஆணையர் வேதரத்தினம், சரவணனை சமரசம் செய்து கீழே இறங்க செய்தார். தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை அவருக்கு வழங்கிய உதவி ஆணையர், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடக் கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். இளைஞர் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.