பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

 

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

கோடநாடு கொலை வழக்கில் கைதாகியுள்ள சயானின் லேட்டஸ்ட் வாக்குமூலம் மீண்டும் அவ்வழக்கின் மீதான கவனத்தைக் குவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியின் பெயர் அடிபடுவதே அதற்குக் காரணம். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் காரணகர்த்தாவே எடப்பாடி தான் என சயான் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. திமுக அரசுக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

இந்தச் செய்திகள் அனைத்தும் எடப்பாடியின் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருப்பதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பான வழக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் மறு விசாரணைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கோர, போலாம் ரைட் என்பது போல நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுத்துவிட்டது. இதனால் பழைய சாட்சியங்கள், குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் என அனைவரிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரக்கும் கோடநாடு ஹெய்ஸ்ட்… கொலையா? தற்கொலையா? – மறுவிசாரணைக்கு தயாராகும் போலீஸ்!

அதேபோல கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த சிசிடிவி ஆப்ரேட்டர் தினேஷ் ஏப்ரலில் கொலை நடக்க 2017ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோலூர் மட்டம் போலீஸார் தற்கொலை என வழக்குப்பதிவு செய்து வழக்கை முடித்து வைத்தனர். இச்சூழலில் தற்போது தினேஷ் தற்கொலையில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்த நிலையில் மறுவிசாரணைக்கு அனுமதி கோரி சோலூர்மட்டம் காவல் துறை சார்பில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவை வட்டாட்சியர் ஏற்றுக் கொண்டதும், தினேஷ் தற்கொலை வழக்கு, சந்தேக மரண வழக்காக மாற்றப்படும். பின்னர் மீண்டும் தினேஷ் மரணம் குறித்து மறுவிசாரணை நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது.