• March
    28
    Saturday

Main Area

Main



நியூ இயர் கொண்டாட்டத்திற்கு தடை...இளசுகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை காவல்துறை!

புத்தாண்டு கொண்டாட்டம்
புத்தாண்டு கொண்டாட்டம்

இன்னும் புத்தாண்டு பிறக்க இரண்டு நாட்களே உள்ளது. நியூ இயரை  அங்கு சென்று கொண்டாட வேண்டும், அப்படி கொண்டாட வேண்டும் என்று கனவு கோட்டை கட்டியிருக்கும் இளசுகளுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கும்.

ttn

அதாவது ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள நட்சத்திர மற்றும் கேளிக்கை விடுதிகளுக்கு காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அவை:-

  • இரவு 1 மணிக்கு மேல் கொண்டாட்ட நிகழ்ச்சியை நடத்தக் கூடாது
  • நீச்சல் குளத்தின் மீது  கொண்டாட்டங்களோ அல்லது கேளிக்கை விருந்துகளோ கூடாது. 
  • கொண்டாட்டத்திற்கு வரும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும், 
  • ஏதேனும் பிரச்னையென்றால் உடனடியாக அருகிலுள்ள காவல்நிலையம் அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூற வேண்டும். 
  • வாடிக்கையாளர்களை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க வேண்டும் 
ttn

மேற்கண்ட முடிவுகள்  சென்னை  காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவின் பேரில் நடைபெற்ற நட்சத்திர விடுதி உரிமையாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில்  எடுக்கப்பட்ட முடிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.