மதுரையில் கடந்த 99 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.1 கோடி வசூல்!

 

மதுரையில் கடந்த 99 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.1 கோடி வசூல்!

மதுரை மாவட்டத்தில் கடந்த 99 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து 1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

நாடு முழுவதும் ரணகளத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தனது வேலையை காட்டி வருகிறது. இங்கு இதுவரை கொரோனாவால் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

மதுரையில் கடந்த 99 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து ரூ.1.1 கோடி வசூல்!

மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மே 13 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜீன் 16 ஆம் தேதி அபராத தொகை 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது உள்ளிட்டவைகளை கண்காணிக்க 10 பறக்கும் படை அமைக்கப்பட்டது. மே 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை 99 நாட்களில் 1 கோடியே 1 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறைவதற்கு இது போன்ற நடவடிக்கையும் ஒரு காரணம் என ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.