ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

ஆந்திர மாநிலம் மசூரி பட்டினத்திலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கஞ்சா சப்ளை செய்த இரண்டு பேரை சென்னை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் என்கிற பெயரில், தமிழத்திற்கு கஞ்சா கடத்தும் போக்கு அதிகரித்து வருவதால், சமூக விரோத கும்பலை பிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து, சென்னை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும், தமிழக எல்லையில் சோதனை செய்யப்பட்டு வந்தன.

அதனைத் தொடர்ந்து
கடந்த மாதம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் போலீஸ் சோதனை சாவடியில், 451 கிலோ கஞ்சா பிடிபட்டது. இதையடுத்து, 2 பேரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தும் ஒட்டு மொத்த கும்பலையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

இதையடுத்து, மாதவரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்
தலைமையிலான தனிப்படையினர் தமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்திலும் பல்வேறு தேடுதல் வேட்டைகளை கடந்த 15 தினங்களாக தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். தமிழகத்தில் தேடுதல் வேட்டை நடத்திய போது முக்கிய குற்றவாளியான
சிராஜுதின் ( 33) மதுரை என்பவருக்கு அடைக்கலம் கொடுத்த விழுப்புரத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

இதையடுத்து, ஆந்திரா காவல் துறையினருடன் இணைந்து வீடு வீடாக கோம்பிங் ஆப்ரேஷன் மேற்கொண்டு நசிரிபட்டிணத்தை சேர்ந்த நக்க பானு பிரகாஷ் (23 ) கண்டி கிருஷ்ணா(23) ஆகியோரை கைது செய்து தமிழகம் கொண்டு வந்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சிராஜுதின் என்பவரையும் அவரது மற்ற கூட்டாளியான சரவணன் என்பவரையும் எண்ணூரில் உள்ள சரவணனின் கள்ளக்காதலியின் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை-2 பேரை பொறி வைத்து பிடித்த போலீசார்

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சாவை கடத்தி வந்த சமூக விரோத கும்பலை பொறி வைத்து பிடித்த போலீசாருக்கு மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுகளை தெரிவித்தார்.