கொரோனா காலத்திலும் அரங்கேறும் கொடுமைகள்… பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விற்கப்பட்ட சிறுமிகள்!

 

கொரோனா காலத்திலும் அரங்கேறும் கொடுமைகள்… பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விற்கப்பட்ட சிறுமிகள்!

பல நாட்களாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படும் 14 வயது சிறுமிக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான முயற்சிகளை ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தச் சிறுமி தன்னைப்போல் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட மேலும் மூன்று சிறுமிகளுடன் புலம்பெயருவோர் குழுவுடன் சேர்ந்து ஜார்கண்டிற்கு நடந்து வந்துள்ளனர். அந்தக் குற்றவாளிகள் தங்களைத் தேடிவந்த போது காட்டிற்குள் ஒளிந்துகொண்டதாகவும் கூறியுள்ளனர்.

கொரோனா காலத்திலும் அரங்கேறும் கொடுமைகள்… பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு விற்கப்பட்ட சிறுமிகள்!

காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சேர்ந்து இந்த மூன்று பெண்களுக்கு உதவி வழங்க முடிவு செய்துள்ளனர். இந்தப் பெண்கள் மே 30ந்தேதி அன்று உத்தரப்பிரதேசம்-ராஜஸ்தான் எல்லையைத் தாண்டி ஹசாரிபாக் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சிறுமி மிகவும் அதிர்ச்சியில் உள்ளதாகவும் தனியாக இருக்கவே பயப்படுவதாகவும் சிறுமியின் சகோதரர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஹசாரிபாக் டி.சி.பி.யு அதிகாரி சஞ்சய் பிரசாத், “அந்தச் சிறுமிகளுக்கு நாங்கள் மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை வழங்குவோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பாதிக்கப்பட்டவருக்கு சிறந்த உதவிகளை வழங்குவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.