உத்தர பிரதேசத்தில் அனல் பறக்கும் பஸ் விவகாரம்… காங்கிரஸ் தலைவர், பிரியங்கா காந்தி உதவியாளர் மீது மோசடி வழக்கு

 

உத்தர பிரதேசத்தில் அனல் பறக்கும் பஸ் விவகாரம்… காங்கிரஸ் தலைவர், பிரியங்கா காந்தி உதவியாளர் மீது மோசடி வழக்கு

உத்தரப்பிரதேசத்தில் லாக்டவுனால் வேலைவாய்ப்பு இல்லாமல் சிக்கி தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப காங்கிரஸ் சார்பில் ஆயிரம் பஸ்கள் இயக்க அனுமதி கோரி உத்தரப்பிரதேசத்துக்கான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி  மாநில அரசிடம் விண்ணப்பித்து இருந்தார். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசும் அனுமதி கொடுத்தது.

உத்தர பிரதேசத்தில் அனல் பறக்கும் பஸ் விவகாரம்… காங்கிரஸ் தலைவர், பிரியங்கா காந்தி உதவியாளர் மீது மோசடி வழக்கு

அதேசமயம், ஆயிரம் பஸ்களின் நம்பர்கள் உள்ளிட்ட  விவரங்களை தரும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு காங்கிரசிடம் கேட்டது. காங்கிரஸ் கட்சியும் 1000 பஸ் விவரங்கள் என ஒரு பட்டியலை உத்தரப்பிரதேச அரசிடம் கொடுத்தது. உடனே காங்கிரஸ் கொடுத்த பஸ்கள் பட்டியல் குறித்து உத்தர பிரதேச அரசு விசாரணை செய்தது. காங்கிரஸ் கொடுத்த பஸ் பட்டியலில், பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் மற்றும் வர்த்தக வாகனங்களாக இருந்தன. இதனையடுத்து உத்தர பிரதேச அரசு காங்கிரஸ் கட்சி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளது.

சாலை போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) ஆர்.வி. திரிவேதி கொடுத்த புகாரின் அடிப்படையில், உத்தர பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லாலு மற்றும் பிரியகாந்தியின் உதவியாளர் சந்தீப் சிங் ஆகியோர் மீது அரசு அதிகாரியிடம் தவறான தகவல் அளித்தல், நேர்மையின்மை, மதிப்புமிக்க பாதுகாப்பை மோசடி செய்தல் மற்றும் ஏமாற்றும் நோக்கத்துக்காக மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். திரிவேதி அளித்த புகாரில், காங்கிரஸ் உறுதியளித்த பேருந்துகளின் பட்டியல் தவறானது என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார் என போலீசார் தெரிவித்தனர்.