darbar
  • January
    21
    Tuesday

Main Area

Main



குழந்தைகளின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாக 30 பேரிடம் காவல்துறை அதிரடி விசாரணை !

கிறிஸ்டோபர் அல்போன்ஸ்
கிறிஸ்டோபர் அல்போன்ஸ்

ஆபாசப் படங்களைப் பகிர்வதிலும், பார்ப்பதிலும் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதன் பின்னர், ஆபாசப் படங்களைப் பகிருபவர்களை காவல்துறை தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். மொத்தமாக 6500 பேர் ஆபாசப் படங்கள் பார்க்கும் பட்டியலில் இருப்பதாகவும், அதில் அதிகமாகக் கல்லூரி மாணவர்கள், மாணவிகள், அரசியல் பிரபலங்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகத் தகவல் வெளியானது.

ttn

இந்த விவகாரத்தில், நேற்று திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஏ.சி மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். அவர், பேஸ்புக்கில் போலிக் கணக்கு ஒன்றை உருவாக்கி அதில் குழந்தைகள் பற்றிய ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஆபாச வீடியோ பகிருபவர்கள் திருச்சி மாவட்டத்தில் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

ttn

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருடன் சேர்ந்து இன்னும் நிறையப் பேர் போலிக் கணக்குகள் ஆரம்பித்து குழந்தைகள் பற்றிய ஆபாசப் படங்களைப் பதிவேற்றம் செய்து வருவது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் கொடுத்த தகவலின் பேரில் 30 பேரிடம் காவல்துறையினர் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

2018 TopTamilNews. All rights reserved.