கேரள லாரி ஓட்டுநரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற, காவல் ஆய்வாளர் கைது

 

கேரள லாரி ஓட்டுநரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற, காவல் ஆய்வாளர் கைது

நீலகிரி

பந்தலூர் அருகே எம்.சாண்ட் லோடு ஏற்றி வர அனுமதி வழங்குவதற்கு, கேரள லாரி ஓட்டுநரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற காவல் ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டார்.

கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் பிரின்ஸ். இவர் மலப்புரத்தில் இருந்து லாரி மூலம் எம்.சாண்ட் ஏற்றி வந்து, நீலகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விநியோகம் செய்து வருகிறார். இந்த நிலையில் பந்தலூர் அடுத்த சேரம்பாடி எல்லைப் பகுதியில் உள்ள காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தவேல் என்பவர், எம்.சாண்ட் ஏற்றி வரும் லாரி ஓட்டுநர்களிடம் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதேபோல், அவர் லாரி ஓட்டுநர் பிரின்சிடமும் லோடு ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கேட்டு உள்ளார்.

கேரள லாரி ஓட்டுநரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற, காவல் ஆய்வாளர் கைது

இதனை விரும்பாத பிரின்ஸ், இதுகுறித்து நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். பின்னர், அதிகாரிகளின் ஆலோசனைப்படி லஞ்ச கொகையை 10 ஆயிரமாக குறைக்குமாறு பிரின்ஸ் கேட்டுள்ளார். அதற்கு, ஆனந்தவேல் ஒப்புகொண்ட நிலையில் நேற்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அவரிடம் வழங்கினார். இதனை அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஆய்வாளர் ஆனந்தவேலை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.