‘ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்’ சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது குவியும் புகார்கள்: போலீசுக்கு பயந்து தலைமறைவு!

‘ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்’ சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது குவியும் புகார்கள்: போலீசுக்கு பயந்து தலைமறைவு!

மதுரை மாநகராட்சியில் சுகாதார துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் நபரை பாலியல் புகாரில் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.

மதுரை மாநகராட்சியில் சுகாதாரத்துறை ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் பெண் ஒருவர், மதுரைக்கு சென்ற முதல்வரை சந்தித்து மனு அளிக்க காத்திருந்துள்ளார். அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், தான் பணியாற்றி வரும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு சம்மட்டிபுரத்தில் சுகாதாரத்துறை ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகன் என்பவர் அலுவலகத்தில் பணிபுரியும் எல்லா பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் அதற்கு இணங்கவில்லை என்றால் வேலையில் இருந்து நீக்கி விடுவேன் என மிரட்டுவதாகவும் அவரை பற்றி முதல்வரிடம் தெரிவிக்க காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

‘ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்’ சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது குவியும் புகார்கள்: போலீசுக்கு பயந்து தலைமறைவு!

அந்த புகாரின் பேரில், முருகன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் படி முருகனை பிடிக்க தனிப்படை அமைத்த போலீசார், அவரை தொடர்புகொள்ள முயன்ற போது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு தலைமறைவானது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த அலுவலகத்தில் பணியாற்றி வரும் கணினி ஆபரேட்டரான பெண் ஒருவருக்கும் முருகன் பாலியல் சீண்டல் கொடுத்ததும் குடும்ப சூழலால் அவர் புகார் கொடுக்காமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

‘ஊழியர்களிடம் பாலியல் சீண்டல்’ சுகாதாரத்துறை ஆய்வாளர் மீது குவியும் புகார்கள்: போலீசுக்கு பயந்து தலைமறைவு!

அந்த பெண்ணிடம் போலீசார் நடத்திய விசாரணையில், முருகனின் அராஜகம் குறித்து போலீசாரிடம் அனைத்தையும் தெரிவித்துள்ளார். அதனிடிப்படையில் போலீசார் முருகனை வலைவீசித் தேடி வருகின்றனர். குடும்ப சூழ்நிலையால் பணிக்கு செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் இது போன்ற அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.