போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு

 

போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு

ஈரோடு திருவேங்கடசாமி வீதியில்
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அதிரடியாக அபராதம் விதித்தனர். ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட ஜவுளிகடைகள் செயல்பட்டு வருகின்றன. குறுகிய சாலை மற்றும் ஜவுளி பண்டல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் இப்பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படும். இந்நிலையில், இந்த பகுதிகளில் இன்று டவுன் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.

போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு

மேலும், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன்கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் ஜவுளி நிறுவனங்களுக்கு சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி வரும் துணிகளை மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், இரவு 7 மணிக்கு மேலும் ஏற்றி, இறக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர். மற்ற நேரங்களில் வாகனங்களில் துணிகளை ஏற்றவோ இறக்கவோ கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். மேலும், கடைகளுக்கு வெளியே வைத்து துணிகளை விற்பனை செய்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும் கூறிய போலீசார், கடைகளுக்கு முன் அடிக்கப்பட்ட எல்லைகோட்டிற்குள் வாகனங்களை நிறுத்தவும் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தினர்.

போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பு