போலி ஏடிஎம் கார்டு உருவாக்கி லட்சக்கணக்கில் திருடிய 6 பேர் கைது!

 

போலி ஏடிஎம் கார்டு உருவாக்கி லட்சக்கணக்கில் திருடிய 6 பேர் கைது!

ஏடிஎம் கார்டு குளோனிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி ஒருவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1, 85,000 வரை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை சைபராபாத் போலீஸ் கைது செய்துள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈஸ்வர் பவன், மோகன் ரெட்டி, ஷேக் கரீம், ராஜேந்திர, பாப்ஜி பாபு மற்றும் சந்தீப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ராமகிருஷ்ணா என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிகிச்சைக்காக வெளியூர் சென்றுள்ளார். அந்த நேரத்தில் இவரது வங்கிக் கணக்கு தகவல்களை பயன்படுத்தி 6 நபர்கள் ரூ.1, 85,000 பணத்தை எடுத்துள்ளனர்.

போலி ஏடிஎம் கார்டு உருவாக்கி லட்சக்கணக்கில் திருடிய 6 பேர் கைது!

புகாரின் அடிப்படையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டன. விசாரணையில் முக்கிய குற்றவாளியான ஈஸ்வர் பவன் பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கு தகவல்களை ஷேக் கரீம் மற்றும் ஷேக் என்பவர்களிடமிருந்து பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

ராமக்ரிஷ்னா சிகிச்சைகாக வெளியூர் செல்லும்போது தனது ஏடிஎம் கார்டை டிரைவரிடம் கொடுத்துச் சென்றுள்ளார்.வங்கிக் கணக்கு தகவல்களை பெற்ற பின்னர் ஈஸ்வர் பவன் மற்றும் கரீம் இருவரும் ராமக்ரிஷ்ணாவிடம் டிரைவராக வேலை பார்த்து வரும் ராஜேந்திரன் என்பவரை தொடர்பு கொண்டுள்ளனர். பின்னர் அந்த ஏடிஎம் கார்டை வாங்கி பணத்தைத் திருடியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.